tamilnadu

img

அறிவியல் இயக்கத்தின் துணையுடன் தன்னிறைவு பெறும் - திருநந்திக்கரை

வளர்ச்சி என்பது கோடீஸ்வரர்களையும் பெரும் கோடீஸ்வரர்களாகளையும் உருவாக்குவது அல்ல. மாறாக அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்து வருகிறது திருநந்திக்கரை கிராம வளர்ச்சி மையம். கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா மையங்களில் ஒன்றான திற்பரப்பு பேரூ ராட்சியின் பகுதியாக உள்ளது திருநந்திக் கரை கிராமம். சுமார் 3 ஆயிரம் மக்கள் தொகை  உள்ள இந்த கிராமத்தில் 2 வார்டுகள் உள்ளன.  ஏழை நடுத்தர மக்களைக் கொண்டுள்ள இப்பகுதி சாதி மத வேறுபாடுகளுக்கு இட மளிக்காமல் உழைப்பை நம்பி முன்னேறி வருகிறது. உழைப்பை போற்றும் வகையில் மாடு வளர்ப்போருக்கு பரிசு வழங்கி பாராட்டு வது, சிறந்த விவசாயி, மரம் ஏறும் தொழிலாளி கள், துப்புரவு தொழிலாளிகள், கிராத்திலி ருந்து மருத்துவம் படித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள், பத்திரிகையாளர்கள், குடி மற்றும் எய்ட்ஸ் நோய்களில் இருந்து  மீட்டவர்கள்… என மக்கள் பணி செய்வோரை யும், சாதனையாளர்களையும் தேடித்தேடி பாராட்டுவதை கிராம வளர்ச்சி மையம் வழக்கமாக கொண்டுள்ளது. அண்மையில், கிராம அறிவியல் திரு விழாவை நடத்தி கிராமத்தின் இளம் தலை முறை கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள், இலக்கிய படைப்பாளிகள் மற்றும்  பல்வேறு துறைகளில் சாதனை படைத்த வர்களை சிறப்பித்தது திருநந்திக்கரை கிராம  வளர்ச்சி மையம். அரசின் நிதி ஒதுக்கீடோ  தலையீடோ இல்லாமல் கிராமத்தை தன்னி றைவு பெற்றதாக மாற்றும் பெரும் முயற்சி களை இந்தமையம் மேற்கொண்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்துவதில் தொடங்கி, உடல்நலம், இயற்கை விவசாயம், இசைப்பயிற்சி, இளை ஞர்களுக்கும் முதியோருக்கும் கணினி பயிற்சி, சுயதொழில் பயிற்சி என கிராம சேவை  மையத்தின் செயற்பாடுகள் விரிவடைந்து செல்கின்றன.

அந்த வரிசையில், இப்போது மாடித்  தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைப்பதற் கான பணியில் ஒட்டுமொத்த கிராமத்தையும் ஈடுபடுத்தியிருக்கிறது இந்த மையம். அதற்கான விதைகளை ஆயிரம் வீடு களுக்கு வழங்கும் திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறார்கள். இதன் தலைவரான பி.திவாகரன் கூறுகையில், 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான விதைகளை 500  குடும்பங்களுக்கு வழங்கினோம். தோட்டக் கலைத் துறையின் மூலம் பயிற்சியும் வழங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட்டங்கள் நடத்துவதிலும் வழிகாட்டுவதிலும் பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் அந்த பணியை துவக்கியுள்ளோம். இப்போது ஆயிரம் வீடுகளுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. கண் சிகிச்சை முகாம், நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகிறோம் என்றார்.

இயற்கை விவசாய ஊக்குவிப்பு

கிராம வளர்ச்சி மையத்தின் செயலாளரும் திற்பரப்பு பேரூராட்சி கவுன்சிலருமான ஷீஜா சந்திரன் கூறுகையில், பேரூராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையில் இருந்து  தயாரிக்கப்படும் மண்புழு உரம் கிலோ பத்து  ரூபாய்க்கு கிடைக்கிறது. அதோடு சாணியை யும் உரமாக பயன்படுத்தி இயற்கை முறை யில் காய்கறி உற்பத்தி செய்வதை ஊக்கு வித்து வருகிறோம். செயற்கை உரம் பயன் படுத்தாமலே காய்கறி விளைவிக்க முடியும் என்பதற்கு நான் உட்பட பலர் உதாரணமாக உள்ளனர். கிராம வளர்ச்சி மையத்தின் வேறு  சில முயற்சிகளும் கொரோனா பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டன. குழுவாக சோப்பு  தயாரித்து சுய தொழில் முயற்சியில் ஈடு பட்டோம். மீண்டும் அதுபோன்ற செயல்பாடு களை தொடர உள்ளோம் என்றார். கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சுரேஷ்  உள்ளிட்டோர், கிராம வளர்ச்சி மையத்தின்  செயல்பாடுகளுக்கு வழிகாட்டி உதவு கிறார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாநில செயற்குழு உறுப்பினரும் திரு நந்திக்கரையைச் சேர்ந்தவருமான சசி குமார், போட்டித் தேர்வுகளுக்கு இளை ஞர்களை தயார் படுத்துவது கிராம வளர்ச்சி  மையத்தின் அடுத்த இலக்கு என்கிறார் செய்து  முடிக்கும் உறுதியுடன்.

-சி.முருகேசன்