திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்று துவங்குகிறது!
சென்னை, பிப். 21- தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் விரைவில் அறி விக்கப்பட உள்ள நிலையில், தேர் தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. இந்நிலையில், திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) துவங்குகிறது. கூட்டணியில், காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, மமக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலை யில், முதலாவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை திமுக குழு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள் ளது. முன்னதாக, கூட்டணி கட்சிகளு டன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தைக்கு பிப்ரவரி 21 அன்று குழு அமைக்கப்படும் என்று ஏற்கெ னவே அறிவித்திருந்தது. அதன்படி, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் அடங்கிய குழுவை, திமுக பொதுச்செயலாளர் க. துரைமுருகன் அறிவித்தார். முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச்செயலா ளர்கள் திருச்சி சிவா மற்றும் ஆ. இராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ. வேலு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.