மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு சிஐடியு தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தா ராம் யெச்சூரி மறைவிற்கு இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரி வித்துக்கொள்கிறது. தோழர் சீத்தாராம் யெச்சூரி, தொழி லாளர் வர்க்கக் கட்சியின் உன்னதத் தலைவர்களில் ஒருவர். தொழிலாளர் வர்க்கம் மற்றும் சுரண்டப்படும் மக்க ளின் நலன்களுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழராவார். நம் காலத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த மார்க்சிய சிந்த னையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.
தோழர் சீத்தாராம் யெச்சூரி, மிகச் சிறந்த கல்வியாளர். அவர் மாணவர் பருவத்தில் அதிபுத்திசாலியான மாண வராகத் திகழ்ந்தார். தோழர் சீத்தாராம் யெச்சூரி 2005 இலிருந்து 2017 வரை நாடாளு மன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அந்த சமயத்தில் நாடாளு மன்றத்தில் அவர் உழைக்கும் மக்க ளின், குறிப்பாக தொழிலாளர் வர்க்கத் தின் குரலை ஓங்கி ஒலித்தார். பொ துத்துறை நிறுவனங்கள் தனியார்மய மாக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த் தார். ஒன்றிய அரசாங்கம் பின்பற்றி டும் நவீன தாராளமயக் கொள்கைக ளின் விளைவாக நடந்திடும் ஊழல் கள் பலவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இப்போதைய ஆட்சியாளர்களின் மதவெறி மற்றும் பழைமைவாதத்தின் அனைத்து வடி வங்களுக்கு எதிராகவும் கடுமையான முறையில் போராடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக, தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கினை நடத்தினார். பாஜக அரசாங்கம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்புச் சட்டத்தின் கீழ் 370ஆவது பிரிவின் கீழ் அளித்து வந்த சிறப்பு அந்தஸ் தை ரத்து செய்ததைக் கடுமையாக எதிர்த்தார். சிறைபோல் மாற்றி வைத்தி ருக்கும் காஷ்மீருக்கு முதன்முதலாக சென்றார்.
தோழர் சீத்தாராம் யெச்சூரி தன் வாழ்நாள் முழுவதும் சோசலிசத்தின் லட்சியங்களுக்காக உறுதிபடநின்று, விஞ்ஞானப்பூர்வமான சோசலிசத்தை உயர்த்திப்பிடித்திடும் சித்தாந்தப் போராட்டத்தை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடத்தி வந்தார். தோழர் சீத்தாராம் யெச்சூரி எண்பதுகளின் பிற்பகுதியிலும், தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் இந்தியாவின் பொருளாதாரம், அர சியல் மற்றும் சமூகம் ஆகியவற்றில் நவதாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னி ன்று நடத்தியவர்களில் ஒருவராவார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பல்வேறு துறைக ளின் அனைத்து தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களிலும் பங்கேற்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். உழைக்கும் மக்களின் பல்வேறு பிரி வினரின் பிரச்சனைகளை எழுப்பிய தோடு, ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதக் கொள் கைகளை நாடாளுமன்றத்தில் தனது மிகச்சிறந்த பேச்சுகளின் மூலம் அம்பலப்படுத்தினார். 2017ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதிக் கான விருதைப் பெற்றார்.
தோழர் சீத்தாராம் யெச்சூரி சர்வ தேசப் பிரச்சனைகளைக் கையாள்வ தில் மிகச்சிறந்த விற்பன்னர். ஏகாதி பத்திய எதிர்ப்பு அரசியலை முன்னெ டுத்துச் சென்றதிலும் மிகச்சிறந்து விளங்கினார். தோழர் சீத்தாராம் யெச்சூரி எண் ணற்ற மொழிகளில் மிகச்சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். அவர் சாமா னிய தொழிலாளர்கள் மத்தியில் மட்டு மல்ல அறிவுஜீவிகள் மத்தியிலும் கூட மிகச்சிறந்த முறையில்பேசக் கூடியவர். பேசிக்கொண்டி ருக்கும்போது மிக விரைவாக நகைச் சுவைத் துணுக்குகளை அள்ளிவீசு வதிலும் புகழ்பெற்றவர். இந்துத்துவா மதவெறி சித்தாந்தத் திற்கு எதிராக முக்கியமான பங்களிப்பு களைச் செய்துள்ளார். ஆட்சியாளர்க ளின் மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அவரது அர சியல் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புக் காக அனைத்துத்தரப்பினராலும் மதிக்கப்பட்டார். நம் தேசிய அரசியலில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவு, முற் போக்கு சமூகத்திற்கு பெரும் இழப்பா கும், குறிப்பாக தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு, மாபெரும் இழப்பா கும். தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு, சிஐடியு தன் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தின ருக்கும், நண்பர்களுக்கும் தம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து க்கொள்கிறது. மறைந்த தோழருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு வார காலத்திற்கு சிஐடியு தன் செங்கொ டியை அரைக்கம்பத்தில் பறக்கவிடும். செவ்வணக்கம் தோழர் சீத்தாராம் யெச்சூரி. (ந.நி.)