tamilnadu

img

பெ. சண்முகம் உண்டியலேந்தி வசூல்; ரூ. 2.55 லட்சத்தை அள்ளித் தந்த மக்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை, மதுரையில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை சிறப்புடன் நடத்துவதற்கான நிதி, பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனொரு பகுதியாக கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் துறைமுகம் பகுதி, என்.எஸ்.சி. போஸ் சாலையில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உண்டியல் ஏந்தி வசூல் இயக்கத்தைத் துவக்கி வைத்தார். 26 குழுக்களாக நடைபெற்ற இந்த நிதி வசூலில், பொதுமக்கள் மனமுவந்து ரூ. 2 லட்சத்து 55 ஆயிரத்து 500-ஐ தாராளமாக அள்ளிக் கொடுத்தனர். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. திருவேட்டை, ஆர். முரளி, வெ. தனலட்சுமி, மத்திய சென்னை மாவட்ட வரவேற்புக்குழு தலைவர் எம்.வி. கிருஷ்ணன், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர். குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.