மதுரை:
கொரோனா தடுப்பு நடவடிக்கை களுக்காகவும், மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தை மதுரை ஆட்சியர் அனீஷ்சேகரிடம் வியாழனன்று வழங்கினார். இந் நிகழ்வில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், வை.ஸ்டாலின்மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் எம்.பி., கூறிய தாவது: கொரோனா தடுப்புப் பணிகள் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் தமிழகத்தில் ஒட்டு மொத்தத்தில் குறைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால்,மதுரை மாவட்டத்தில் கிராமங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்துவருகிறது. கிட்டத்தட்ட மதுரை மாநகராட்சிப் பகுதிகளும், கிராமப்புறங்களும் தொற்றுப் பரவலில் சமஅளவில் உள்ளது. கிராமப்புறங் களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதிக்குஉட்பட்ட மேலூர், கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் 650 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ள னர். இவர்களுக்கு உடனடித் தேவைஒரு மனிதனின் உடலில் ஆக்சிஜன்அளவைக் கண்டறியும் கருவி. இந்தக் கருவிகள் ஓரிரு தினங்களில் அவர்களுக்கு வழங்கப்படும்.ஆம்புலன்ஸ் வசதி, கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் உடனடியாக பிபிகிட் தேவைப்படுகிறது. மாவட்டநிர்வாகம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிபிகிட்வழங்க வேண்டும். ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டைப் போக்க மதுரையில்உள்ள தனியார் மருத்துவமனை களில் சுமார் 50 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. அவர்களுடன் மதுரை மாவட்ட நிர்வாகம் பேசி 50 ஆம்புலன்ஸ்களையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.