திருச்சி:
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து, மீட்புப்பணி பல னளிக்காமல் உயிரிழந்த சிறுவன் சுஜித்தை மீட்க 11 கோடி ரூபாய் செலவானதாக சமூகவலைத்தளத்தில் பரப்பப்படும் வதந்திகளை மறுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:மனிதாபிமான அடிப் படையில் உதவிய பல்வேறு நிறுவனங்கள் எந்த வித செலவையும் கோரவில்லை. 5 ஆயிரம் லிட்டர் டீசல் மட்டும் இயந்திரங்களுக்கு வழங்கப்பட்டது. இதர செலவுகள் 5 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். சுஜித்தின் உடலை மீட்க உதவிய எல்&டி,கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்சன், என்எச்ஏஐ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், மற்றும்ஜேசிபி ஒப்பந்ததாரர் களுக்கும் 4 நாட்களாக தொடர்ந்து இரவு பகலாக ஊண் உறக்கமின்றி பாடுபட்ட ஊழியர்களுக்கும் நன்றி என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.