அருப்புக்கோட்டை:
நீட் தேர்வு மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவிஜோதி ஸ்ரீ துர்கா குடும்பத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மாணவியின் சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு சனிக்கிழமைவருகை தந்த உதயநிதி ஸ்டாலின் மாணவியின் தாயார் அபிராமியிடம் ஆறுதல் கூறி ரூ 5 லட்சம் நிதியுதவி அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாணவி துர்கா நீட்தேர்வு எழுதவிருந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக தன்னுடைய உயிரை மாயத்துக்கொண்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் இது சமமற்ற சம வாய்ப்பு இல்லாத ஒன்று. ஏழை மாணவர்கள் மருத்துவராக தடுப்பதே நீட் தேர்வின் நோக்கமென என திமுக கூறி வருகிறது. கலைஞர், ஜெயலலிதா இருக்கும் பொழுதும் நீட்தேர்வு தற்போது அதிமுக அரசு மத்தியஅரசின் அடிமையாக இருக்கிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வு அச்சத்தால்மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள் இதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அரியலூரில் விக்னேஷ் என்கின்ற மாணவன் இதேபோன்று நீட் தேர்வு எழுத முடியாமல் தற்கொலை செய்து கொண்டான். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். எட்டு மாதங்களில் ஆட்சிமாறும் நல்ல முடிவு இருக்கும் என்றார்.