சாலைப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண், காது, வாய் பொத்தி மௌனப் புரட்சி இயக்கம்
திருப்பூர், அக். 10 - சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை நீதிமன்ற உத் தரவுப்படி பணிக் காலமாக வரன்மு றைப்படுத்தி ஊதியம் வழங்குவது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலைப் பணியாளர்கள் கண், காது, வாய் பொத்தி மௌனப் புரட்சி இயக்கம் நடத்தினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் 41 மாத கால பணிக்காலத்தை முறைப்ப டுத்துவது, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தி ருப்பதை திரும்பப் பெறுவது, நீதி மன்ற ஆணையை அமல்படுத்த வேண் டும், கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப் பணியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும், கருணை அடிப்படை யில் பணி கேட்டு விண்ணப்பித்திருக் கும் சாலைப் பணியாளர் குடும்பத்தின ருக்கு விரைந்து பணி வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க் கும் வகையில், சாலைப் பணியாளர்கள் கண், காது, வாயைப் பொத்தி மௌனப் புரட்சி இயக்கம் நடத்துவதென தீர்மா னித்தனர். அதன்படி வெள்ளியன்று தாராபுரம் நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பும், திருப்பூர் கண்கா ணிப்புப் பொறியாளர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியம் உள்பட சங்கத் தின் கோட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பி னர்கள் கலந்து கொண்டு கண், வாய், காதுகளைப் பொத்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.