கைகொடுக்கும் கேரள மோப்ப நாய்களின் மீட்புப் பணி
ஸ்ரீசைலத்தில் மேலும் ஒரு உடல் மீட்பு
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணியின் போது கடந்த பிப்.22-ஆம் தேதி சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 2 பொறியா ளர்கள், 2 ஆப்ரேட்டர்கள், 4 தொழிலாளர் கள் என மொத்தம் 8 பேர் சுரங்கத்துக் குள் சிக்கி உயிரிழந்தனர். மீட்புப் பணி சிக்கலானதன் காரணமாக இன்னும் 8 பேரின் உடல் முழுமையாக கண்ட றியப்படவில்லை. கேரளத்திலிருந்து வரவழைக்கப் பட்டுள்ள மோப்ப நாய்கள் உதவியுடன் கடந்த மார்ச் 9ஆம் தேதி ஒரு தொழிலா ளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதி காலை கேரள மோப்ப நாய்களின் உத வியோடு மற்றொரு உடல் காணப்பட்டுள் ளது. மீதம் 6 பேரின் உடலைத்தேடும்பணி கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நீதிபதி வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற எதிர்ப்பு
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் யஷ்வந்த் வர்மா வீட்டு வளாகத்தில், எரிந்த நிலை யில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப் பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடை பெற்று வரும் நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்றுவதற்கு அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வழக் கிஞர்கள் சங்கத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், “நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகா பாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எந்த நீதிமன்றமும் குப்பை கொட்டும் இடம் அல்ல. நடவடிக்கைகள் முடியும் வரை அவர் உச்சநீதிமன்றத்தின் கண்கா ணிப்பில் இருக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நீதிபதிகளின் இடமாக அலகாபாத் உயர் நீதிமன்றம் மாறக்கூடாது. இத்தகைய நீதி பதிகளை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என அவர் கூறியுள்ளார்.
ஷிண்டே கும்பலைக் கண்டு எனக்கு பயம் இல்லை குணால் கம்ரா விளாசல்
பிரபல நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா ஒரு நிகழ்ச்சியில் சிவசேனா கட்சியை இரண்டாகப் பிரித்து பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சித்தும், மகாராஷ்டிரா துணை முத லமைச்சரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவை அரசியல் துரோகி என்றும் குறிப்பிட்டார். இதனையடுத்து சிவசேனா (ஷிண்டே) கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தின் உணவகத்தை திங்களன்று சூறையாடினர். இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்ததற்கு நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன், ஷிண்டே கும்பலைக் கண்டு எனக்கு பயம் இல்லை என குணால் கம்ரா கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,“எனக்கு எதி ராக எடுக்கப்பட்ட எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு போதும் நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டேவைப் பற்றித்தான் நான் பேசினேன். ஷிண்டே கும்பலைக் கண்டு நான் பயம் கொள்ள வில்லை’ எனக் கூறினார்.