தொழிற்சங்கப் பதிவுச் சான்றைப் பெற்றுள்ள சாம்சங் இந்தியா தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களையும், பாராட்டுக் களையும் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க வரலாற்றில் பதிவு தாமதமானாலும், உறுதி யான போராட்டத்தின் மூலம் சாம்சங் தொழிலாளர்கள் அதனை வென்று காட்டியிருப்பதாகவும், அதற் காக சிஐடியு தொழிற்சங்கத் தலை வர்களைப் பாராட்டுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையில் செவ்வா யன்று (28.01.2025) சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. பால கிருஷ்ணன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் பின்வருமாறு:
தென்கொரிய நாட்டைச் சார்ந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனத்தில், கடந்த 2024 ஜூன் 16 அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட பேரவையில், ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்ற பெய ரில் தொழிற்சங்கம் அமைப்பது என்றும் அதை சிஐடியு உடன் இணைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றிய அடிப்படையில், ஜூன் 26 அன்று தொழிலாளர் துறை இணை ஆணையர் மற்றும் தொழிற்சங்க பதிவாளர் வசம் விண்ணப்பம் செய்யப்பட்டது. மூன்று மாதங்களில் சாதா ரணமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கும் நடைமுறை உள்ளது. ஆனால், தொழிலாளர் துறை தாம தம் செய்ததும், நிர்வாகம் தொழிற்சங்கத்திற்கு எதிராக தொழி லாளர் குழு அமைத்து மிரட்டி கையெழுத்து கேட்ட நிலையில் செப்டம்பர் 8 அன்று வேலை நிறுத்தம் துவங்கியது.
38 நாள்கள் தொழிலாளர்கள் உறுதியாக நின்று பல்வேறு வழக்கு, அடக்குமுறை, கைது, பந்தல் பிரிப்பு, உட்கார்ந்து போராட அனு மதிக்காதது போன்ற பல்வேறு சவால்களை எதிர் கொண்டனர். இருந்த போதும் பல்வேறு தரப்பு ஆதரவு அரசியல் கட்சிகளின் ஆத ரவு போராடிய தொழிலாளர்களை ஊக்கப்படுத்தியது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 15 அன்று வழங்கப்பட்ட ஏற்புடைய அறிவுரைப்படி, தொழிற்சங்க பதிவுக்கு, நீதிமன்றம் அளிக்கும் வழிகாட்டுதல் அடிப்படையில் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தை ஏற்று வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது
அதன்படி, 6 வாரங்களில் சங்கப் பதிவு குறித்து தொழிலாளர் துறை முடிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில், வழங்கிய தீர்ப்பின் படி 27.01.2025 அன்று தொழிற்சங்க பதிவாளர் மூலம், ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க’த்திற்கு பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க வரலாற்றில் பதிவு தாமதமாகி, உறுதியான போராட்டத் தின் மூலம் வெற்றிபெற்று இருப்பது பெரும் பாராட்டுக்குரியது. அத்தகைய போராட்டத்தை நடத்திய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.]