tamilnadu

img

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: பொதுமக்கள் கடும் அவதி

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: பொதுமக்கள் கடும் அவதி

கோவை, அக்.19- கோவைக்கு ஆரஞ்சு எச் சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலை யில், அன்னூர் பகுதியில் குடியி ருப்புகளை சூழ்ந்து தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதியடைந் தனர். கோவை, நீலகிரி உள்ளிட்ட  மாவட்டங்களுக்கு கனமழைக் கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம், அன்னூர் பகுதி யில் கடந்த இரண்டு தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிர மாக பெய்து வருகிறது. இரவு  நேரங்களில் வெளுத்து வாங்கி வரும் பருவமழை காரணமாக குடி யிருப்புகளை மழைநீர் சூழ்ந்து தேங்கி நிற்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அன்னூர் - சக்தி சாலையில் பழனி  கிருஷ்ணா அவென்யூ, புவனேஸ் வரி நகர் போன்ற குடியிருப்புகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண் ணீர் தேங்கி சாலைகள் மூடப் பட்டுள்ளன. மேலும், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாக னங்களையும் தண்ணீர் சூழ்ந்து பாதி அளவுக்கு மூழ்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. சற்று தாழ்வான பகு தியாக இருக்கும் இப்பகுதியில் ஒவ்வொரு முறையும் மழைக் காலங்களில் இதே நிலை நீடிப்ப தாக அப்பகுதி பொதுமக்கள் குற் றஞ்சாட்டியுள்ளனர்.  மேலும், மழைநீர் வடிந்து செல்ல போதிய அளவில் வடிகால் கள் ஏற்படுத்தி தரப்படாததாலும், ஏற்கனவே இருந்த நீரோடை  வழித்தடங்களும் அடைக்கப்பட் டுள்ளதன் காரணமாக அப்பகுதி யில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இத னால், அந்த பகுதியில் சுகாதார  சீர்கேடு ஏற்படுவதுடன் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியா மல் கடும் அவதிக்குள்ளாகி உள் ளனர். அன்னூர் பேரூராட்சி அதி காரிகள் விரைந்து செயல்பட்டு மழை நீரை வெளியேற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர் வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் பொள்ளாச்சி அருகே நா.மூ. சுங்கம் அருகே பாலாற்றங்கரை யில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலை, அவ்வப்போது வெள் ளம் சூழ்வது வழக்கம். இந்நிலை யில், சனியன்று இரவு பெய்த கன மழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது காவலாளிகள் மகாலிங்கம், ஜெயக் குமார் ஆகியோர் கோவிலுக்குள் தங்கியிருந்தனர். இதனையடுத்து இருவரையும் ஞாயிறன்று காலை  பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய  அலுவலர் கணபதி தலைமை யிலான தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பிறகு கயிறு கட்டி கரைக்கு அழைத்து வந்தனர். கோவை குற்றாலம் மூடல்  மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை குற்றா லம் அருவியில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு நீர் ஆர்ப்பரித்து செல் கிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்தும், தற்காலிகமாக குற்றாலம் அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ள னர். மேலும், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக் கள் படையெடுத்து வருகின்றனர். இந்த சூழலில் ஞாயிறு விடுமு றையை முன்னிட்டு கோவை குற்றா லம் அருவிக்கு குளிக்க வந்த சுற்று லாப் பயணிகள் ஏமாற்றமடைந்த னர். இருப்பினும் அருவிக்குச் செல்லும் பாதையில் பழைய வாகனம் நிறுத்துமிடம் வரை பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.