headlines

img

நெடிய போராட்டத்தின் வெற்றி

நெடிய போராட்டத்தின் வெற்றி

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றப்படும் என்றும், இதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் கே.என்.பாஷா தலைமை யில் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையா ளர்கள், மானுடவியல் அறிஞர்களை கொண்ட ஆணையம் அமைக்கப்படும் என்றும் சட்டப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

முன்னால் நீதியரசர் கே.என்.பாஷா தலைமையிலான இந்த ஆணையம் விரைந்து செயல்பட்டு பரிந்துரையை அளிப்பதும், அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுவதும் அவசியமாகும்.

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் தொடர்ச்சி யாக வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக்குழு தலைவராக இருந்த அ.சவுந்தர ராசன் 29.09.2015 அன்று பேரவை  விதி 123இன் கீழ் மசோதா ஒன்றை கொண்டு வந்தார். ஆனால் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு இம்மசோதாவை நிறைவேற்ற முன்வர வில்லை. எனினும் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை தரவுக ளுடன் வலியுறுத்தி வந்தது.

எனினும் தனிச்சட்டம் தேவையில்லை. இப்போதிருக்கிற சட்டங்களே போதுமானது என்பதே மாநில அரசுகளின் நிலைபாடாக இருந்தது. 

நெல்லையைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் படுகொலை நாடு முழு வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தினர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுப் பதாக முதல்வர் உறுதியளித்தார்.

இந்த பின்னணியில் திராவிடர் கழகம் சார்பில் செங்கல்பட்டு நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவின்போதும், ஆண வப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. முதல்வர் தன்னுடைய பேரவை உரை யில் இந்த தீர்மானத்தை மேற்கோள் காட்டி யுள்ளார். இது சரியானதே. எனினும் இதற்கு முந்தைய வலியுறுத்தல்களையும், கோரிக்கைக ளையும் இணைத்துச் சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். வர விருக்கும் சட்டம் தமிழ்நாட்டில் சமூக நீதி வர லாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமை யும் என்பது திண்ணம்.