tamilnadu

img

அரசு மருத்துவமனையில் ஆய்வு

அரசு மருத்துவமனையில் ஆய்வு

நாமக்கல், நவ.10- திருச்செங்கோடு அரசு மருத்துவமனை புதிய கட்டி டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு மேற் கொண்டனர். நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவம னைக்கு இணையாக, ரூ.23 கோடி மதிப்பீட்டில் திருச் செங்கோடு அரசு மருத்துவமனை தரைத்தளத்துடன் கூடிய ஐந்து மாடி கட்டிடமாக உருவாக்கப்பட்டு, அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தில் செயல்பட துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திங்க ளன்று புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம், கர்ப்பிணி  பெண்கள் பரிசோதனை செய்யும் இடம் ஆய்வகம் போன்றவைகள் செயல்பட துவங்கின. இந்நிலையில், புதிய கட்டிடத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பி னர் ஈஸ்வரன் திங்களன்று ஆய்வு செய்தார்.