tamilnadu

img

தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்க!

தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்க!

சென்னை, மார்ச் 11 - சிஐடியு மாநில நிர்வாகக் குழு கூட்டம் மார்ச் 9  அன்று சென்னையில் மாநிலத் தலைவர் ஜி.சுகு மாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய துணைத்  தலைவர்கள் அ.சவுந்தரராசன், மாலதிசிட்டிபாபு, பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், பொருளாளர்  எஸ்.ராஜேந்திரன், உதவி பொதுச் செயலாளர்கள்  வி.குமார், கே.திருச்செல்வன், கே. ஆறுமுக நயி னார், இ.முத்துக்குமார் உட்பட மாநில நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்த லில், மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவ சாயிகள் விரோத கொள்கைகளை அமல்படுத்தும்  மதவாத பாஜகவையும், அதனுடன் கூட்டணி சேர்ந் துள்ள கட்சிகளை தோற்கடிக்கவும்,  இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு அணியை வெற்றி பெறச் செய்யவும் சிஐடியு உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவையின் 17 ஆவது தேர்த லுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்பு  காட்டி வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் தனது வாக் குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு வருகின்றன. அதில் தொழிலாளர் நலன் கோரிக் கைகளை இடம் பெறச் செய்ய வேண்டுமென சிஐ டியு மாநிலக் குழு வேண்டுகோள் விடுக்கிறது. 1) தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள், மருந்து விற்பனை பிரதி நிதிகள் உட்பட பல தொழில்களுக்கு 2018 ஆம்  ஆண்டுக்கு பிறகு குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படவில்லை. அகவிலைப்படி மட்டுமே திருத்தி அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு இந்திய  அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி பட்டியலில்  இரட்டை இலக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. இதில் தொழிலாளர்களுக்கான ஊதியம் திருத்தி  அமைக்கப்படும் போது மேலும் நீடித்த வளர்ச்சி யாக இருக்க முடியும். எனவே எந்தவகையான தொழிலை செய்தாலும் மாதம் ரூ.26000/- குறைந்த பட்ச ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 2) தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமை,  கூட்டுப்பேர உரிமை, போராடும் உரிமையை பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக ஆட்சி அமல் படுத்தியுள்ள நான்கு தொகுப்புச் சட்டங்களை தமிழ்நாட்டில் அமலாக்கிட மாட்டோம் என அறி விப்பது பயன் தரும். 3) அரசு துறைகள் மற்றும் அரசுக்குச் சொந்த மான நிறுவனங்களிலும் பல ஆண்டுகளாக தொ டர்ந்து ஒப்பந்தம், தொகுப்பூதியம் அடிப்படையி லேயே பல்லாண்டு காலமாக பணியாற்றி வரும்  தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன், காலமுறை ஊதியம்  வழங்கிடுவதின் மூலம் மிகப்பெரிய முன்னேற் றத்தை தொழிலாளர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திட முடியும். 4) உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் ஹவுஸ்கீப்பிங், பேருந்து நிலையங்கள், மின்சார பேருந்து உள்ளிட்ட பல  பணிகளில் வெளிமுகமை ஒப்படைப்பு (அவுட்  சோர்ஸிங்) நடந்து வருகிறது. இது தொழிலாளர் களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய கூலியை  குறைக்கக் கூடியதாகவும், சமூக பாதுகாப்பற்ற தாகவும் உள்ளது. எனவே தொழிலாளர்களைப் பாதிக்கும் அவுட்சோர்ஸிங் பணிகள் அனுமதிக்கப் படாது என்ற உறுதி மாபெரும் வரவேற்பைப் பெறக்  கூடியதாக இருக்கும். 5) அங்கன்வாடி, மக்களைத் தேடி மருத்து வம், ஆஷா, டெங்கு கொசு ஒழிப்பு பணி உள்ளிட்ட  பல திட்டப்பணிகள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. முழுக்கவும்  பெண்கள் வேலை செய்யும் இந்த திட்டம் பெண் களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவக் கூடி யது ஆகும். இந்த திட்டப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். 6) இரவு நேரப் பணிகளில் பெண்கள் ஈடுபடுத்தப் படுவதை தவிர்ப்பது, சுரங்கம் போன்ற அபாய கரமான தொழில்களில் பெண்களை ஈடுபடுத்தும்  சட்டத்தை ரத்து செய்வது, ஜவுளி உள்ளிட்ட வணிக  வளாகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உட்கா ரும் இருக்கைகள் வசதி செய்து தரப்பட வேண்டும்  என்ற தமிழக அரசின் உத்தரவு அமலாவதை கண் காணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும். 7) பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் விடுப்பு வழங்குவதை உறுதி  செய்வது மாபெரும் வரவேற்பை பெறக் கூடியதாக அமைந்திடும். 8) வீட்டுவேலை செய்யும் பெண்களின் ஊதி யத்தை உத்தரவாதம் செய்யும் வகையிலும், அர்பன் கம்பெனி (Urban Company) மூலம் வேலைவாய்ப்பு பெறக்கூடிய இளைஞர்களுக்கு அரசே ஒரு மணி நேரத்திற்கான கூலியை தீர்மா னிப்பது, எளிய மக்களின் கூலி உத்தரவாதமாக கிடைக்கும் வகையில் அமைந்திடும். 9) நலவாரியங்களில் குறிப்பாக, கட்டு மானத் தொழிலாளர் நலவாரியத்தில் அதீதமான  நிதி இருந்தும், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட பணப்பயன்கள் முழுமை யாக கிடைப்பதில்லை. குறிப்பாக இ.எஸ்.ஐ, பணிக் கொடை போன்ற சமூக பாதுகாப்பு நடவடிக்கை களை உறுதி செய்திட முடியும். நலவாரியங்கள் மூலம் இதை செய்திட முடியும். தமிழ்நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப விவரங்கள் இதற்கு  பெரும் வசதியாக இருக்கும். 10) கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் வழங்கப்படும் நலத்திட்ட பணப்பலன் தொகை யினை உடலுழைப்பு உள்ளிட்ட இதர தொழில்வா ரிய நலவாரியங்களிலும் உயர்த்திட வேண்டும்.  குறிப்பாக ஓய்வூதியம் ரூ.3000 வழங்க ஆவன  செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக் கான ஓய்வூதியம் பெறும் வயதை 55 ஆக நிர்ண யம் செய்திட வேண்டும். 11) கைத்தறி, மீன்பிடி, பட்டாசு, தீப்பெட்டி, பீடி, விசைத்தறி, தோட்டத் தொழில் ஆகியவற்றில் ஈடு பட்டு வரும் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை  உத்தரவாதப்படுத்தும் வகையில் அரசு ஓய்வூதி யம் வழங்கிட முன்வர வேண்டும். 12) பொது போக்குவரத்தின் பயன்பாட்டை மக்க ளிடம் அதிகரிக்க, ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாக னங்களுக்கு அரசே “செயலி” அமைத்து தொழி லாளர் பயன்படுத்தும் விதத்தை அதிகப்படுத்த வேண்டும். 13) தமிழ்நாட்டில் கலைஞர் அவர்கள் முதல்வ ராக இருந்த போது எடுத்த முன்முயற்சியான, தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் அமலாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். 14) தமிழ்நாட்டிற்குள் நாளுக்கு நாள் அதி கரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களை பதிவு  செய்யவும், பணியிட பாதுகாப்பையும், சமூக பாது காப்பையும் உறுதி செய்ய வேண்டும். 15) இந்தியாவில் முதன்முதலில் மே தினத்தை கொண்டாடிய பெருமைக்குரிய சிந்தனைச்  சிற்பி  ம.சிங்காரவேலர் அவர்களின் நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் எழுப்பிட வேண்டும். 16) இந்தியாவில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமான “மெட்ராஸ் லேபர்  யூனியன்” கட்டிடத்தை அரசு கையகப்படுத்தி, தொழிலாளர் உரிமையை பறைசாற்றும் வகை யில் மணி மண்டபம் எழுப்பிட வேண்டும். 17) ஜனநாயக வடிவங்களில் உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது  பதியப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அர சியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. மேலும் மேற்கு ஆசிய பகுதிகளில் ஏற்பட்டு உள்ள போர் பதற்றத்தை பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு, மக்களின் அடிப்படை  தேவைகளில் ஒன்றான வீட்டு உபயோக சிலிண்டர்  விலையை உயர்த்தி, கோடிக்கணக்கான வீடு களின் அன்றாட செலவினத்தை உயர்த்தியுள்ள தற்கு இக்கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வ தோடு, தொழிலாளர்கள் ஆலைவாயில்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் எதிர்ப்பு இயக்கங்கள் நடத்துமாறு சிஐடியு கேட்டுக் கொள்கிறது.