நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடுக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய கிழக்கில் நிலவிவரும் போரால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், பெரும்பாலான ஹோட்டல்கள், விடுதிகள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்களான எரிபொருள் விநியோகிக்கும் எல்.பி.ஜி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது, பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடுக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்காவுடன் மோடி அரசு செய்துகொண்ட சமரசமே சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.
