ஜவுளிப்பூங்கா அமைக்க எதிர்ப்பு: நூதன முறையில் மனு
சேலம், நவ.10- ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப் பட்டறைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் முகத் தில் சாயம் பூசி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், ஜாகிர் அம் மாபாளையம் பகுதியில் ஒருங் கிணைந்த ஜவுளிப்பூங்கா என்ற பெயரில், பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து 10க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் அமைக்க திட்டமிட் டுள்ளன. தமிழ்நாட்டில் சாயப்பட்ட றைகள் அமைத்துள்ள பகுதியைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள், அதி கப்படியான நிலம், நீர், காற்று மாசு பாட்டின் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள னர். மேலும், அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடிநீரில் கொடிய வேதிப் பொருட்கள் கலந்து, நீர் முற்றிலு மாக கெட்டுப்போனதால் அன்றாட பயன்பாட்டிற்கும், குடிநீருக்கும் மக்கள் நீரை விலைக்கு வாங்கும் அவலநிலை தான் உள்ளது. இந்த நிலைமையில், இப்படி ஒரு கொடிய திட்டம் வந்தால், எங்களுக்கும் அதே நிலைமை தான் ஏற்படும். இது தனியார் லாபத்திற்காக எங்கள் உயிரை காவு வாங்கும் செயலா கும். எனவே, சாயப்பட்டறை அமைக் கும் இத்திட்டத்தை கைவிட்டு, பொதுமக்களின் உடல்நலத்திற் கும், உயிருக்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று, சேலம் ஆட்சியர் அலு வலகத்தில் பொதுமக்கள் முகத் தில் சாயம் பூசி மனு அளித்தனர்.
