முன்னாள் மாணவிகள் சந்திப்பு
திருப்பூர், நவ.10- திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவி கள் சந்திப்பு நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் உள்ள கலை யரங்கில் நடைபெற்றது. 1996 ஆம் ஆண்டு முதல் 2024 - 25 ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவிகள் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். தங்களது கல்லூரி கால நினைவு களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். மேலும், தாங்கள் பயின்ற வகுப்புகளை பார்வையிட்டு, கல்லூரி கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர்.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்
ஈரோடு, நவ.10- சத்தியமங்கலத்தில் ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை யை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள அடர்ந்த வனத்திலிருந்து உணவு, குடிநீர் தேடி வெளியேறும் வன விலங்குகள், குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்க ளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவது வாடிக் கையாகி வருகிறது. இந்நிலையில், வனத்திலிருந்து ஞாயி றன்று வெளியேறிய சிறுத்தை ஒன்று, மாராயிபாளையம் கிரா மத்துக்குள் நுழைந்தது. அங்கு ஒரு வீட்டின் வெளியே கட்டி யிருந்த ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அங்கிருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். இதில், ஆட்டை அடித்துக்கொன்றது சிறுத்தை என்பதை உறுதி செய்த வனத்துறையினர், அப்பகுதி மக்கள் உதவியுடன் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர். அந்த சிறுத்தை குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள மலைக் குன்றின் மீது படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளத்தில் பரவி வரும் நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.
அரசுப்பள்ளிகளில் திருட்டு: 4 பேர் கைது
தருமபுரி, நவ.10- தருமபுரியில் 4 அரசுப்பள்ளிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து அரசுப்பள்ளிகளை குறிவைத்து, பூட்டுகளை உடைத்து கணினிகள் உள்ளிட்ட சாதனங்களை அடையாளம் தெரியாத நபர்கள் திரு டும் சம்பவங்கள் நடைபெற்றன. அதியமான்கோட்டை, பாலக்கோடு, காரிமங்கலம், மதிகோன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளில் நடைபெற்ற இச்சம்பவங்கள் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார். அந்தவகையில், போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு எர்ணஅள்ளி மேம்பாலம் பகுதியில் சிலர் சந்தேகத்திற்கி டமான வகையில் நின்றிருந்தனர். அவ்வழியே ரோந்துப் பணிக்கு சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். இதில் முன்னுக்குப்பின் முரணான தகவல் களை அவர்கள் அளித்துள்ளனர். இதையடுத்து, முறையாக மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த பரத்குமார் (20), யோககுமார் (20), பார்த்தசாரதி (20), ரமேஷ் (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், அனைவ ரும் சோமனஅள்ளி அரசு உயா்நிலைப்பள்ளி உட்பட 4 பள்ளி களிலும் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த கணினி உள்ளிட்ட சாதனங்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சனியன்று கைது செய்தனர். 17 வயது சிறு வனை சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
குடியிருப்பில் உலாவிய யானை
கோவை, நவ.10- வரப்பாளையம் பகுதிக்குள் யானை புகுந்ததால் பொது மக்கள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், தாளியூர் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள் ளது. நாள்தோறும் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள், விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்ற னர். இந்நிலையில் திங்களன்று அதிகாலை வனப்பகுதி யிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, வரப்பாளையம் ஊருக்குள் நுழைந்துள்ளது. இதனால் தெரு நாய்கள் அனைத் தும் குறைத்த நிலையில், தோட்டத்து வீட்டில் இருந்த நபர் வெளியில் வந்து டார்ச் அடித்து பார்த்துள்ளார். அப்பொழுது அவரை நோக்கி யானை வேகமாக வந்ததால், அவர் அச்ச மடைந்து ஓடியுள்ளார். அந்த காட்சிகள் அங்கு பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலை யில், தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி யுள்ளன. தொடர்ந்து அந்த யானை அப்பகுதியிலிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றது. இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வனத் துறையினர் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ள னர்.
சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
பொள்ளாச்சி, நவ.10- பொள்ளாச்சி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், திமுக கவுன்சிலர் மகன் உட்பட இருவர் உயிரிழந்தனர். கோவை மாவட்டம், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 10 ஆவது வார்டு கவுன்சிலராக புவனேஸ்வரி என்பவர் உள் ளார். இவரது கணவர் இளங்கோ முன்னாள் கவுன்சிலர். இவர்களது மகன் பரத்குமார் (33) மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த அவரது நெருங்கிய நண்பர் சதாசிவம் ஆகியோர், ஞாயிறன்று இரவு 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வடக்கிபாளை யத்திலிருந்து புரவிபாளையம் சென்றுள்ளனர். அப்போது வாமனா கார்டன் அருகே வழியில் குறுக்கே வந்த டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், படுகாய மடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயி ருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பரத்குமார் பொள்ளாச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வடக்கிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
காவலர் தேர்வு: 400 பேர் பங்கேற்பு
உதகை, நவ.10– உதகையில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் களுக்கான எழுத்துத்தேர்வில், 400 பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில், 2025 ஆம் ஆண்டிற்கான காவல் துறை யில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவ லர் மற்றும் தீயணைப்பாளர்கள் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு கலைக்கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. 530 நபர்கள் விண்ணப்பித்தனர். மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தேர்வை 72 பெண்கள் உட்பட 400 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு மையத்தில் கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் சசி மோகன் ஆய்வு செய்தார். 140 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.
மூதாட்டி கொலை: தந்தை, மகன் கைது
ஈரோடு, நவ.10- மூதாட்டி கொலை வழக்கில் தந்தை, மகன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள புதுவடவள்ளி வேடர் காலனி யைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (75). இவர், தனது சகோதரர் சீனிவாசன், அவரது மகன் பார்த்தசாரதி ஆகியோருடன் வசித்து வந் தார். இந்நிலையில், கண்ணம்மாள் உயிரி ழந்துவிட்டதாக உறவினர்களுக்கு சீனிவா சன் கடந்த அக்.26 ஆம் தேதி தகவல் தெரிவித்துள்ளார். அவரது இறப்பில் சந்தேக மடைந்த உறவினர்கள் இதுகுறித்து போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சட லத்தை மீட்டு கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடை யே, பார்த்தசாரதி தலைமறைவானதால் சந் தேகமடைந்த போலீசார், சீனிவாசனிடம் விசா ரணை மேற்கொண்டனர். இதில், பார்த்த சாரதி, கண்ணம்மாள் இடையே தகராறு ஏற் பட்டதும், ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, கண்ணம்மாளின் தலையில் கல்லால் தாக்கி யதால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் இயற்கை மரணம் அடைந்ததாக உறவினர்களுக்கு சீனிவா சன் தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சீனிவாசனை கைது செய்த போலீசார், தப்பியோடிய பார்த்த சாரதியை தேடி வந்தனர். இந்நிலையில், கர் நாடகா மாநிலம், பெங்களூருவில் பதுங்கியி ருந்த அவரை போலீசார் ஞாயிறன்று கைது செய்தனர்.
உதகையில் நீர் பனிப்பொழிவு துவங்கியது!
உதகை, நவ.10- நீலகிரி மாவட்டத்தில் நீர் பனிப்பொழிவு துவங்கியதால், கடும் குளிரான பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள் ளது. மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டு தோறும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிப்பொழிவு காணப்படும். ஆனால், இந்தாண்டு பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பர் மாதத்தில் தாமதமாக உறை பனிப் பொழிவு துவங்கியுள்ளது. குறிப்பாக, அரசு தாவரவியல் பூங்கா, குதிரைப் பந்தய மைதா னம், தலைக்குந்தா மற்றும் சமவெளி பகுதி களில் நீர் பனிப்பொழிவு அதிகளவில் காணப் படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இத னால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தாவர வியல் பூங்காவில் நீர் பனியிலிருந்து புல்வெளிகளை பாதுகாக்க, பாப் அப் மூலம் நீர் பீச்சி வருகின்றனர். வரும் நாட்க ளில் உறை பனிப்பொழிவு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சமாக தலைக்குந்தா பகுதிகளில் 5 டிகிரி செல் சியசும், தாவரவியல் பூங்கா பகுதியில் 10 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.
மின்சார வசதி கேட்டு பழங்குடியினர் மனு
உதகை, நவ.10– மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி தராததால், இருள் சூழ்ந்த கிராமத்தில் வன விலங்குகளுக்கு மத்தியில் அச்சத் துடன் வாழ்ந்து வருவதாக பழங்குடி யின மக்கள் ஆட்சியரிடம் திங்களன்று முறையிட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை, மசின குடி அருகே சிறியூர் கிராமத்தில் இரு ளர், குரும்பர் என 70க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டு காலம் வசித்து வரும் அப்பகுதி மக்கள் தொகுப்பு வீடு கட்டித்தரக்கோரி, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று கூக்கல் தொரை ஊராட்சி வாயிலாக தொகுப்பு வீடு கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின் இணைப்புக் கான நடவடிக்கைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பல முறை அணுகி முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இருள் சூழ்ந்த நிலையில், விஷ உயிரினங்களின் தொல்லைக்கு மத்தியில் மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, யானை நடமாட்டம் இருப் பதால் மக்கள் அச்சத்துடன் பொழுதை கழிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், புதி தாக கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பல மாதங்களாக மின் இணைப்பு கிடைக்கவில்லை. சம்மந்தப் பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி தராததால் வன விலங்குக ளுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். கிராம மக்களின் நலன் கருதி விரைவில் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார், என்ற னர்.