tamilnadu

img

ஓய்வூதிய திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, நவ.10- ஓய்வூதிய திருத்தச் சட்டத்தை ஒன் றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என  வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் ஓய்வூதிய மதிப் பீட்டு சட்ட நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7850 வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தி யடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீ தம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண் டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தி லுள்ள குறைகளை சரி செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், ஆனைமலை  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின்  வட்டக்கிளைத் தலைவர் ஆ.காளி முத்து தலைமை வகித்தார். கிளைச்  செயலாளர் பழனிச்சாமி கோரிக்கை களை விளக்கி பேசினார். இதில் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எஸ்.மதன்,  முன்னாள் துணைத்தலைவர் பொன். கருணாநிதி, வட்டக்கிளைப் பொருளா ளர் கே.விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.