tamilnadu

img

நீதி தராசை கையிலேந்தி சாலைப் பணியாளர்கள் போராட்டம்

நீதி தராசை கையிலேந்தி சாலைப் பணியாளர்கள் போராட்டம்

பொள்ளாச்சி, நவ.10- மாநில நெடுஞ்சாலை ஆணை யத்தை கலைத்திட வேண்டும் என வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் நீதி  தராசை கையிலேந்தி கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்ற ஆணை யின்படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத் தை கலைத்திட வேண்டும். நெடுஞ் சாலை பராமரிப்புப் பணியை அரசே  ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற  இளைஞர்களுக்கு சாலைப்பணி யாளராக பணி நியமனம் செய்ய  வேண்டும். கருணை அடிப்படை  பணிநியமனம் கேட்டு விண்ணப்பம்  செய்து காத்திருக்கும் சாலைப்பணி யாளர் குடும்பத்தினருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் திங்களன்று நீதி தராசை கையிலேந்தி, கும்மிய டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி கோட்டப் பொறியா ளர் அலுவலகம் அருகே நடைபெற்ற  போராட்டத்திற்கு, சங்கத்தின் கோட் டத் தலைவர் சின்ன மாரிமுத்து தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி கோட்டச் செயலா ளர் ச.ஜெகநாதன் பேசினார். இதில்  ோட்டப் பொருளாளர் சந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், குரங்குச்சா வடி பகுதியில் உள்ள கோட்ட பொறி யாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சாலைப் பணியாளர் சங்க கோட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை  வகித்தார். மாநில துணைத்தலைவர்  சிங்கராயன் துவக்கவுரையாற்றி னார். மாநில துணைத்தலைவர் தங்க ராஜ், கோட்டச் செயலாளர் கலை வாணன் அந்தோணி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். இதில் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க செயலாளர் முத்துக் குமரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.