ஐடி துறையில் ஐயப்பாட்டுக்குரிய பணிநீக்கங்கள்
கோவை, நவ.10- இந்தியாவின் தக வல் தொழில்நுட்பத் துறை, உலகின் முக்கிய சக்தியாக வளர்ந்தா லும், செயற்கை நுண்ண றிவு (AI) வளர்ச்சி உள் ளிட்ட காரணங்களைக் காட்டி, நிறுவனங்களில் பணிநீக்கங்கள் அதி கரித்து வருகின்றன. முறையாகத் தொழிற் சங்க ஒப்பந்தங்கள் இல்லாததால், அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக, யூனியன் ஆப் ஐடி & ஐடிஇஎஸ் (UNIT) மாநில பொதுச்செயலாளர் அழகு நம்பி வெல்கின் தெரிவித்துள்ளார். கோவையில் இந்திய தொழிற்சங்க மையம் மாநில மாநாட்டில் பிரநிதியாக பங்கேற்ற வெல்கின் தீக்கதிர் செய்தியாளர்க ளிடம் மேலும் பேசுகையில், சட்டத்திற்கு புறம்பான இந்த ஆட்குறைப்புகளுக்கு, நிறு வனங்களின் பொருளாதார நெருக்கடி காரண மில்லை. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறு வனத்தில் ஏறத்தாழ 38,000 பேர் பணிநீக் கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி யுள்ளார். டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவ னம் விதிமீறலில் ஈடுபடும்போது அரசு தலை யிடாமல் இருப்பது, மற்ற நிறுவனங்களுக் கும் தவறான முன்னுதாரணமாகிவிட்டது. அனுபவம் உள்ளவர்களை நீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்தில் புதியவர்களை நிய மிக்கும் போக்கு தொடர்கிறது. 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலக்கு வைக்கப்படுகிறார் கள். இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, ஐடி நிறுவனங்க ளின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். பெஞ்ச் பாலிசி, அப்ரெய்சல், மகப் பேறுக்குப் பிந்தைய ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வசதி, மாதவிடாய் கால விடுப்பு மற்றும் ‘வேலையிலிருந்து துண்டிக்கும் உரிமை (Right to Disconnect)’ சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த ஐடி தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரண்டு போராட வேண்டும் என்றார்.
