மணிப்பூரில் குக்கி-ஜோ பழங்குடியினக் குழுக்கள் எழுப்பிய சட்டமன்றத்துடன் கூடிய தனி யூனியன் பிரதேசம் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள் ளது. கடந்த 2 வருடங்களாக மணிப்பூரில் நீடிக்கும் இன மோதல்களின் பின்னணியில், ‘மாநிலத்திற் குள் இணக்கமான சகவாழ்வு சாத்தியமில்லை’ எனக் கூறி இந்தக் கோரிக்கை முன்வைக்கப் பட்டது. இது, மணிப்பூர் நெருக்கடிக்கு நிரந்தர மான அரசியல் தீர்வு காண்பதில் உள்ள ஆழ மான பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டுகிறது.
நவம்பர் 6, 7 தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளில், குக்கி தேசிய அமைப்பு (KNO), ஐக்கிய மக்கள் முன்னணி (UPF) ஆகிய இரு பெரும் குக்கி அமைப்புகளின் கீழ் இயங்கும் 24 கிளர்ச்சிக் குழுக்கள் பங்கேற்றன. இந்தக் குழுக்கள், அரசுடன் 2008 ஆம் ஆண்டு முதல் கையெழுத்திட்டுள்ள ‘நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தல்’ (Suspension of Operations - SoO) என்ற ஒப்பந்தத்தின் கீழ் செயல்படு கின்றன. அமைதியை நிலைநாட்ட அரசு மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் மத்தியில் இந்த ஒப்பந்தம் ஒரு பாலமாக உள்ளது.
கடந்த 2023 ஆண்டு மே 3-ம் தேதி இன மோதல் வெடிப்பதற்கு முன்னர், குக்கி பழங்குடி யினக் குழுக்கள் மாநிலத்துக்குள் கூடுதல் அதி காரத்துடன் கூடிய தன்னாட்சிப் பிரதேசங் களைக் கோரி வந்தன. வன்முறை வெடித்த பிறகு, இந்தக் கோரிக்கை முற்றிலும் மாறி, தனி யூனியன் பிரதேசம் வேண்டும் என்று உருவெடுத்துள் ளது. இது, மாநிலத்தின் நிர்வாக எந்திரம் தங்கள் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தவறிவிட்டது என்று அவர்கள் கருதுவதன் வெளிப்பாடாகும்.
பழங்குடியின நில உரிமைப் பிரச்சினைகள், சட்டரீதியான வாரிசுரிமைச் சிக்கல்கள், இம்பால் பள்ளத்தாக்குக்குச் செல்ல முடியாத பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற அடிப்படைப் பிரச்சினை களுக்கு உறுதியான தீர்வுகளைக் காணாமல், கோரிக்கையை மட்டும் நிராகரிப்பது தீர்வாகாது; அந்தக் கோரிக்கை பொருத்தமல்ல என்ற போதிலும்! மேலும், செப்டம்பர் 4, 2025 அன்று மீண்டும் கையெழுத்திடப்பட்ட SoO உடன்பாட்டில், ‘இந்திய அரசியலமைப்பின் கீழ் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு’ என்ற ஒரு புதிய நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. இது, மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்கும் விதமாக அமைந்தாலும், அந்த மக்களின் பிரச்சனை களைத் தீர்க்க தடையாக அமையக் கூடாது.
சகவாழ்வு சாத்தியமில்லை என்று ஒரு சமூகம் கருதுமளவுக்கு நெருக்கடி முற்றியதற்கு, மணிப்பூரை ஆளும் பாஜக அரசாங்கத்தின் பாரபட்சமான அணுகுமுறையும் நிர்வாக அலட்சியமுமே முக்கியக் காரணங்கள். தனிப் பிரதேசக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலை யில், குக்கி-ஜோ மக்களின் நியாயமான அச்சங் களையும், நீதிக்கான தேடலையும் பூர்த்தி செய்யும் வகையில், ஒன்றிய அரசு உண்மையான அரசியல் தீர்வுக்குரிய கட்டமைப்பை விரைந்து உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
