tamilnadu

img

பெரம்பலூரில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூரில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்  

பெரம்பலூர், நவ.9-  பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதித்துறையின் சார்பில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு முகாம்  பெரம்பலூர் தனியார் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார்.  இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / சார்பு நீதிபதி சரண்யா, மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி இந்திராணி, மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.