tamilnadu

img

வாலிபர் சங்க அமைப்பு தின கருத்தரங்கம்

வாலிபர் சங்க அமைப்பு தின கருத்தரங்கம்

புதுக்கோட்டை, நவ.9-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 45 ஆவது அமைப்பு தினக் கருத்தரங்கம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ஜனார்த்தனன் தலைமை வகித்தார். ‘புது தலைமுறை, புது அரசியல்’ என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக், ‘நான் பேசப் போவதில்லை’ என்ற தலைப்பில் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு ஆகியோர் உரையாற்றினர். நடைபெற்ற வேலைகள் குறித்து மாவட்டச் செயலாளர் ரா.மகாதீர் பேசினார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் எஸ். கோபாலகிருஷ்ணன் வரவேற்க, மாவட்டப் பொருளாளர் ஆர். தினேஷ் நன்றி கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோபால், பிரகாஷ், கனகராஜ், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.