tamilnadu

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகை நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்

முதல்வர் மு.க. ஸ்டாலின்  இன்று புதுக்கோட்டை வருகை நலத்திட்டப் பணிகளை  தொடங்கி வைக்கிறார்

புதுக்கோட்டை, நவ.9-  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (நவ.10) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நலட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும் உள்ளார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.11,481 கோடி மதிப்பீட்டில் 38,35,669 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.2,800 கோடியில் 62,088 வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றபட்பட்டுள்ளன. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10.11.2025 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்து மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில் 767 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்’’ என்று தெரிவித்தார். இவ்விழாவில் மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.