headlines

img

என்னமோ நடக்குது? மர்மமாய் இருக்குது!

என்னமோ நடக்குது?  மர்மமாய் இருக்குது!

“ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்” என்று அருணாச்சலம் படத்தில் ஒரு வசனம் வரும். அதுபோல அமெரிக்கா சொல் வதை, மோடி அரசு செய்து முடிக்கிறதோ என்கிற கேள்வி எழுகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதலை நான்தான் தலையிட்டு நிறுத்தினேன் என்று ஒருமுறையல்ல, ஐம்பத்து நான்கு முறை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி னார். ஆனால் டிரம்ப் சொல்லியதால் நாங்கள் போரை நிறுத்தவில்லை என்று வெளிப்படை யாக இந்திய பிரதமர் மோடி கூறவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசியதாகவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டிருப்பதா கவும்  டொனால்டு டிரம்ப் இப்பொழுது கூறி வரு கிறார். ஆனால் இதையும் பிரதமர் மோடி மறுக்க வில்லை. 

மாறாக, தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தி ருக்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் நம்பிக்கை யுடன் உலகை ஒளிரச் செய்வதுடன் தீவிரவா தத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர் த்து ஒற்றுமையாக நிற்போம் என்றும் கூறி யுள்ளார். தீவிரவாதத்தை ஒற்றுமையுடன் எதிர் க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எது தீவிரவாதம் என்று வரைய றுப்பதில்தான் சிக்கல்.

தீவிரவாதத்தை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டு இதுவரை அமெரிக்கா நடத்திய எந்த வொரு போரிலும் தீவிரவாதம் ஒழிக்கப்பட வில்லை. மாறாக, அமெரிக்கா தனது ஒருதுருவ வேட்கையை தீர்த்துக் கொள்ளவே போர் நடத்தி வருகிறது. 

இது ஒருபுறமிருக்க, அமெரிக்காவும், இந்தி யாவும் வர்த்தகம் தொடர்பாக நீண்ட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இதன் விளை வாக இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா குறைக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகின்றன. அநியாயமாக அமெரிக்கா உயர்த்திய அடாவடி வரியில் சிறு பகுதியை குறைத்துவிட்டு, இந்திய நலனுக்கு எதி ரான முடிவுகளை எடுக்க டிரம்ப் நிர்வாகம் நிர்ப் பந்திக்குமானால், அதற்கு ஒன்றிய அரசு இணங்கக் கூடாது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் மற்றும் சோயா உள்ளிட்டவற்றை அமெரிக்கா விடமிருந்து கூடுதலாக இறக்குமதி செய்ய இந்தியா இணங்கக்கூடும் என்றும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்கக்கூடும் என்றும் மாறாக, அமெரிக்காவிடமிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்க வகை செய்யப்படும் என்றும் தகவல்கள் கசிகின்றன. எந்தவொரு உடன்பாடும் இந்தியாவின் நலனுக்கும், இறை யாண்மைக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். ஆனால் மறைக்கப்படும் மர்மங்கள் சந்தே கத்தை ஏற்படுத்துகின்றன.