states

‘மகாராஷ்டிரா பெண்கள் உதவித்தொகை திட்டத்தில் ரூ.164 கோடி மோசடி’

‘மகாராஷ்டிரா பெண்கள் உதவித்தொகை திட்டத்தில் ரூ.164 கோடி மோசடி’

பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் (லட்கி பகினி) பல் வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின் றன. சமீபத்தில் ஆண்கள் கூட “லட்கி பகினி” திட்டத்தில் உதவித்தொகை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்நிலையில், லட்கி பகினி திட் டத்தில் ரூ.164 கோடி மோசடி நிகழ்ந் துள்ளதாக “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொ டர்பாக அக்கட்சியின் பொதுச் செய லாளர் ஆதித்ய தாக்கரே வெளி யிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ் டிரா மகாயுதி அரசாங்கம் உண்மை யான அரசாங்கம் அல்ல. வாக்குத் திருட்டு மற்றும் அரசாங்கப் பணத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் உருவான அரசாங்கம் ஆகும். லட்கி பகினி   திட்டத்தில் இல்லாத சுமார் 30 லட்சம் பெண்களுக்கு பணம் கொடுக் கப்பட்டுள்ளது. இது அரசாங்க கரு வூலத்திலிருந்து திருடப்பட்ட பணம் ஆகும். தேர்தலில் வெற்றி பெற அர சாங்கப் பணம் பயன்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 164 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.