states

ஒடிசா எஸ்ஐ தேர்வு முறைகேடு சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல்

ஒடிசா எஸ்ஐ தேர்வு முறைகேடு சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல்

பாஜக ஆட்சி செய்யும் ஒடிசா மாநிலத்தில் அக்., 5 மற்றும்  6ஆம் தேதிகளில் காவல் துறையில் துணை ஆய்வாளர்கள் (எஸ்ஐ) தேர்வு நடைபெற இருந்தது. 933 பணியிடங்களுக்கு சுமார் 1.53 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வு நடைபெற இருந்த ஒரு வாரத்தி ற்கு முன்பு செப்., 30ஆம் தேதி வினாத் தாள் கசிந்தது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரம் மற்றும் மேற்கு வங்கம், ஆந்திரா மாநி லங்களில் ரூ. 25 லட்சத்திற்கு  வினாத்தாள் விற்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளி யாகின. வினாத்தாள் கசிவை கண்டித்து தேர்வர்கள் மற்றும் காங்கிரஸ், இடது சாரி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இத னால் எஸ்ஐ தேர்வை ஒடிசா காவல் ஆட் சேர்ப்பு வாரியம் தற்காலிகமாக ஒத்தி வைத்தது. மேலும் இந்த வினாத்தாள் முறைகேட்டில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுவரை 123 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 114 பேர் பணிக்கு விண்ணப்பித்தவர்களும் அடங்குவர். இந்நிலையில், காவல் துணை ஆய்வாளர் பணியமர்த்தலில் முறைகேடு தொடர்பான விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றி ஒடிசா அரசு அறிவித்துள்ளது. ஆந்திரா,  மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்க ளுக்கு இந்த ஊழல் பரவியுள்ளதால், விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மஜ்ஹி ஒப்புதல் அளித்துள்ளார்.