வாக்குத் திருட்டு நடந்தது உண்மை தான் நவி மும்பையில் 76,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு
பாஜக எம்எல்ஏ மாத்ரே ஒப்புதல்
மும்பை வாக்குத் திருட்டு காரணமாகவே பாஜக மத்தியிலும், மாநிலங்க ளிலும் தொடர்ந்து ஆட்சி அதிகா ரத்தில் நீடித்து வருகிறது என ஆதாரங்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குற்றம்சாட்டினார். தொடர்ந்து வாக்குத் திருட்டு தொடர்பாக ஒவ்வொரு முறைகேடுச் சம்பவங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஆனால் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக ஒன்றிய மோடி அரசு, தலைமை தேர்தல் ஆணையம் அமைதி காத்து, பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், வாக்குத் திருட்டு நடந்தது உண்மை தான் என பாஜக பெண் எம்எல்ஏவே போட்டுடைத்துள்ளார். வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் மூலமாக வாக்காளர் திருட்டு முறை கேடு அரங்கேற்றப்படும் வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 76,000 போலி மற்றும் இரட்டைப் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பெலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்டா மாத்ரே பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகை யில், “நவி மும்பையின் ஐரோலி சட்டமன்றத் தொகுதியில் 41,000 மற்றும் பெலாப்பூர் சட்ட மன்றத் தொகுதியில் 35,000 இரட்டை மற்றும் போலி வாக்காளர்கள் உள்ளனர். அரசு அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் பணம் பெற்றுக் கொண்டு போலி வாக்காளர்களைப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக புகார் அளித் தும் கூட போலி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. போலி வாக்காளர்கள் சேர்ப்பால் நேர்மை யான வேட்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானம் ஆகும். தான் போட்டியிட்ட தேர்தலு க்கு முன்பும் இது போன்ற போலி வாக்காளர்க ளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வில்லை” என அவர் குற்றம்சாட்டினார். வாக்குத் திருட்டு நடக்கவே இல்லை என தேர்தல் ஆணையமும், பாஜகவும் கூறி வரும் நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் வாக்குத் திருட்டு நடந்தது உண்மை தான் என கூறியுள் ளது, அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களை நீக்க 4.8 லட்சம் ரூபாய் லஞ்சம்
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒவ்வொரு வாக்காளர்கள் பெயரை நீக்குவதற்கு தலா ரூ.80 இடைத்தரகர்களுக்கு கொடுக்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களை நீக்கக் கோரி 6,018 விண்ணப்பங்கள் தாக் கல் செய்யப்பட்டன. ஆனால் தேர்தல் அதிகா ரிகள் வீடுவீடாகச் சென்று சரிபார்த்ததில் 24 பெயர்கள் மட்டுமே உண்மையில் நீக்கப்பட வேண்டியவை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வெளியிட் டுள்ள அறிக்கையில்,”வாக்காளர் நீக்கத்திற் காக சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப் பத்திற்கு (ஒரு வாக்காளர்களை நீக்க) சம்பந் தப்பட்ட ஆப்ரேட்டர்களுக்கு ரூ.80 லஞ்ச மாக கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.4.8 லட்சம் பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது” என எஸ்ஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.