tamilnadu

“டிரம்ப்பிடமிருந்து தப்பிக்கவே ஆசியான் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார்”

“டிரம்ப்பிடமிருந்து தப்பிக்கவே ஆசியான் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார்”

மலேசியா தலைநகர் கோலாலம் பூரில் அக்., 26 முதல் 28ஆம் தேதி வரை 3 நாட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப் பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.  இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனா திபதி டொனால்டு டிரம்ப், பிரேசில் ஜனா திபதி லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ள னர். பிரதமர் மோடியும் மாநாட்டில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளிப் பண்டிகையை காரணம் காட்டி பிரதமர் மோடி ஆசியான் மாநாட்டை புறக்கணித்துள்ளார். மேலும் மோடி காணொலி காட்சி மூலம் உரை யாற்றவுள்ளார் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், டிரம்ப்பிடம் இருந்து தப்பிக்கவே ஆசியான் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகை யில்,“பிரதமர் மோடி கோலாலம்பூரில் நடக்கும் உச்சி மாநாட்டுக்குச் செல்லாத தற்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை. அங்கு வருகை தரும் அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப்பிடம் மாட்டிக் கொள்ள மோடி விரும்பவில்லை. சில வாரங்களுக்கு முன்னதாக, எகிப்தில் நடந்த காசா அமைதி மாநாட்டுக்கான அழைப்பை மோடி  மறுத்ததற்கான காரணமும் இது தான். சமூக வலைதளங்களில் டிரம்ப்பை புகழ்ந்து மோடி பதிவிடுவது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆபரேசன் சிந்தூரை தடுத்ததாக 53 முறையும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தப் போவதாக மோடி உறுதி அளித் திருப்பதாக 5 முறையும் கூறியவருடன் நேரில் நெருக்கமாக சந்திப்பது வேறு விஷயம். இது மோடிக்கு மிகவும் ஆபத்தானது. இதனை உணர்ந்து தான் ஆசியான் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணித்துள்ளார்” என அவர் கூறினார்.