headlines

img

முன்கணிப்பும் உடனடிச் செயல்பாடும்

முன்கணிப்பும்  உடனடிச் செயல்பாடும்

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிர மடைந்துள்ள நிலையில் அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக் குரியவை. முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவும் காணொலி மூலமாகவும் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரி கள் ஆகியோருடன் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருவது அரசின் தீவிர அக்கறையையும் மிகுந்த பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் களத்தில் இறங்கி நேரடியாக மழைநீர் சூழும் பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை தீவிர மாக கண்காணித்து வருவதும் வரவேற்கத்தக்கது.

அக்டோபர் 17 முதல் 24 வரை மாநிலம் முழுவ தும் சராசரியாக 179.80 மில்லிமீட்டர் மழை பெய்துள் ளது. மேடவாக்கத்தில் மட்டும் 93.30 மில்லிமீட்டர் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இந்த கன மழையை திறம்பட எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள திட்டமிட்ட ஏற்பாடுகள் திட்டமிட்ட நிர்வாகத்தின் சிறந்த உதாரணமாகும். 215 நிவாரண மையங்கள் முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் முழுமையாக செய்யப் பட்டுள்ளன. 

மழைநீரை திறம்பட வெளியேற்ற 1,436 பம்பு கள் உட்பட நவீன ஆம்பிபியன் வாகனங்கள், ரோபோடிக் எஸ்கலேட்டர்கள் என பல்வேறு அதி நவீன இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 22,000 பணியாளர்களும் 2,149 குடிநீர் வாரிய களப்பணியாளர்களும் இரவு பகல் பாரா மல் அயராது களத்தில் உழைத்து வருகின்றனர். 454 குடிநீர் வாகனங்கள் மூலம் தடையில்லாமல் குடிநீர் வழங்கப்படுகிறது. 1913, 1916 என்ற இலவச உதவி எண்கள் 24 மணி நேரமும் செயல்படு கின்றன.

எனினும், டெல்டா மாவட்டங்களிலும் இராம நாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் விளை நிலங்களில் மழை நீர் தேங்கி பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல், மிளகாய்ப் பயிர்கள் மழைநீரில் மூழ்கி விவசாயி கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். மழை நின்று இரண்டு நாட்களாகியும் வடிகால்கள் ஆக் கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் வடியாமல் வயல்வெளிகளில் தேங்கி நிற்பதனால் நெற் பயிர்கள் அழுகி அழிந்து வருகின்றன. 

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுதல், உடைந்த வாய்க்கால் கரைகளை செப்பனிட்டு சீர்படுத்துதல், சேதமடைந்த பயிர்க ளுக்கு முறையான கணக்கீட்டின் அடிப்படையில் நியாயமான இழப்பீடு உடனடியாக வழங்குதல் ஆகியவை மிக அவசர நடவடிக்கைகளா கும். இயற்கை பேரிடரை முற்றிலும் தவிர்க்க முடி யாது என்றாலும், நிர்வாகத்தின் உடனடி நடவ டிக்கைகள் பாதிப்பைக் கணிசமான அளவில் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.