நத்தம், நவ.6 - திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.சச்சிதானந்தம் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில், ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., புதனன்று நத்தம் அருகே முளையூரில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். தொடர்ந்து உலுப்பகுடி, புன்னப்பட்டி, பண்ணுவார்பட்டி, மதுக்காரம்பட்டி, சாத்தாம்பாடி, கோமணாம்பட்டி, வத்திபட்டி, லிங்கவாடி, பரளிபுதூர், மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சமுத்திராபட்டி, பூதகுடி, சிறுகுடி, ஆலிச்சிபட்டி, புதுப்பட்டி, குட்டுப்பட்டி, அரவங்குறிச்சி, குரும்பபட்டி, கோசுகுறிச்சி, சிரங்காட்டுப்பட்டி, செந்துறை, பிள்ளையார்நத்தம், குடகிபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், திமுக ஒன்றியச் செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகரச் செயலாளர் ராஜ்மோகன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் பொன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.