games

img

குகேஷ், மனுபாகருக்கு ‘கேல் ரத்னா’ விருது அறிவிப்பு!

செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகியோருக்கு ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’ விருது 4 விளையாட்டு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
சீனாவில் நடந்த செஸ் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரீஸ் பாரா-ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கம் வென்ற ப்ரவீன் குமார் மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை வெண்கலம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நான்கு பேருக்கு ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 17 பாரா தடகள வீரர்கள் உட்பட 32 வீரர்கள் அர்ஜுனா விருது பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.