games

img

தற்போதைக்கு ஓய்வு இல்லை - ரோகித் சர்மா

புதுதில்லி,ஜனவரி.04- தற்போதைக்கு ஓய்வு இல்லை என இந்திய கிடிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடப்புத் தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போதைக்கு ஓய்வு இல்லை என ரோகித் ஷர்மா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது; “நான் பேட்டிங்கில் தொடர்ந்து ரன் எடுக்காததால் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என எனக்கு தோன்றியது. எங்களுக்கு இது முக்கியமான போட்டி என்பதால் அணிக்கு என்ன தேவை என்பதுதான் எனது முன்னுரிமையாக இருந்தது. நான் எங்கும் செல்லவில்லை, இது ஓய்வு பெறுவதற்கான முடிவு அல்ல என தந்து ஓய்வு குறித்து ரோஹித் சர்மா கூறியுள்ளார்.