மீண்டும் சம்மன்!
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளர் நடராஜனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. வழக்கில் ஏற்க னவே 3 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது நட ராஜனுக்கு சம்மன் அனுப்பப் பட்டது.
ஆர்.முத்தரசன் வேண்டுகோள்
சென்னை: மார்ச் 5 அன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத் தில் அரசியல் உறுதியோடு அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆர்.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இக்கூட்டத் தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கலந்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஞானசேகரன் வழக்கு மாற்றம்!
சென்னை: அண்ணாப் பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சை தாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல் படும் மகளிர் நீதிமன்றத் திற்கு வழக்கு மாற்றப்பட்டு உள்ளது. மேலும், ஞான சேகரனிடம் குற்றப் பத்தி ரிகை நகல் வழங்கப் பட்டுள்ளது.
இரு மொழியே எங்கள் உயிர்க் கொள்கை
சென்னை: சென்னை யில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை குறைத் தால் அதிமுக எதிர்க்கும் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார் என்றும் கூறி னார். மேலும், இரு மொழி கொள்கை எங்கள் உயிர் மொழிக் கொள்கை என்றும் தெரிவித்தார்.
பதவி உயர்வு: அரசு உத்தரவு
சென்னை: நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 11 காவல்துறை உயரதிகாரி களை பணியிட மாற்றம் செய்தும் தமிழக அரசு செவ்வாயன்று உத்தர விட்டுள்ளது.