tamilnadu

img

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மய நடவடிக்கைகளை கைவிடுக! டிஆர்இயூ மண்டல மாநாடு வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மய  நடவடிக்கைகளை கைவிடுக! டிஆர்இயூ மண்டல மாநாடு வலியுறுத்தல்

சென்னை, அக். 10 - பொதுத்துறை நிறுவ னங்களை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை களை கைவிட வேண்டும் என டிஆர்இயூ மண்டல மாநாடு வலியுறுத்தியுள்ளது. தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்  35ஆவது மண்டல மாநாடு  தோழர்கள் பாசுதேவ் ஆச்சார் யா, கே.வெங்கடேசன், ஜி. அன்பழகன் நினைவரங்கில்  (சென்னைஐசிஎப் அம்பேத் கர்  அரங்கம்) அக். 8, 9 தேதி களில் நடைபெற்றது. தலை வர் ஜி.சுகுமாறன் தலைமை தாங்கினார்.  வரவேற்புக்குழு தலைவர், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வரவேற்றார். சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், 8ஆவது ஊதியக் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும், பழைய ஓய் வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், டிராக் மெயின்டனன்ஸ் தொழி லாளர்களுக்கு உயிர் காக்கும் கருவி (ரக்‌ஷித்) உட னடியாக வழங்க வேண்டும், டிஆர்இயூ சங்கத்தின் அனைத்து கிளைகளுக்கும் அலுவலகம் உள்ளிட்ட அங்கீகார வசதிகளை வழங்க வேண்டும், டிராபிக் பிரிவில் பணியாற்றும் டிஆர்பி சிக்னல் ஆர்டிகான் ஊழியர்களுக்கு ரிஸ்க் அலவன்ஸ் வழங்க வேண் டும், ரயில்வே லெவல் கிரா சிங் கேட் கீப்பர்களுக்கு 8 மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும், 530 சப்ஸ்டியூட் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும், சென்னையில் 4ஆவது ரயில் முனையமாக பெரம்பூரை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

 டிஆர்இயு மாநாட்டில் செயல் தலைவராக அ.ஜானகி ராமன், தலைவராக ஜி.சுகுமாறன், பொதுச்செயலாளராக பேபி ஷகிலா, பொருளாளராக ஆர்.சரவணன், உதவி பொதுச்செயலாளர்களாக ஏ.வெங்கட்ராமன், என்.ரவிக்குமார், துணைத் தலைவர்களாக டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், எளமரம் கரீம், வி.ஹரி லால், ஆர்.இளங்கோவன், ஆர்.ஜி.பிள்ளை, பத்ம குமார், ஜி.சிவகுமார், மேத்யூ சிரியாக், திருமலை அய்யப்பன், சுஷோபனன், திருப்பதி, உதவி பொதுச் செயலாளர்களாக, அனில் குமார், அருண்குமார் செழியன், பிஜு, உதய பாஸ்கர், கார்த்திக் சங்கிலி, சந்தான செல்வம், ராஜா,  சரவணன், தீபா திவாகர், சிவகுமார், பி.கே.மாதவன், அல்லிமுத்து, அருண் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.