tamilnadu

img

பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 1000 வழங்க வேண்டும்!

சென்னை, டிச. 30 - பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் பரிசுத் தொகை இல்லாதது தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே, குடும்ப அட்டைதாரர்கள் அனை வருக்கும் ரூ. 1000 பொங்கல் பரிசுத் தொகை  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கை யில் கூறியிருப்பதாவது: பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழா ஆகும். பொங்கலை சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்புத் திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் வழக்க மாக வழங்கப்படும் பொங்கலுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். தமிழக நிதியமைச்சர் அவர்கள் கூறி யிருக்கும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்வது, இயற்கை பேரிடருக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை தராமல் சொற்ப நிதியை வழங்கியிருப்பது, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற காரணங்கள் அனைத்தும் ஏற்கத்தக்கது தான். இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, பரிசுத் தொகையை வழங்க மறுப்பது பொருத்தமல்ல. எனவே, தமிழ்நாடு அரசு நிதிச் சிரமம் இருப்பினும், பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதைப் போல இந்த ஆண்டு பொங்கலுக்காக அனைத்து குடும்ப  அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகையாக ரூ. 1000 வழங்கிட முன்வர வேண்டுமென்று சிபிஎம் மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.