districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு

கோவை, ஜன.1- சிபிஎம் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, கோவையில் வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரை யில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், இம் மாநாட்டை கோவை மாவட்ட உழைப்பாளி மக்களின் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் கோவையில் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு அமைக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா தலைமையில் நடைபெற்ற வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, வி.தெய்வேந்திரன், கே.எஸ்.கனகராஜ், வி. இராமமூர்த்தி ஆகியோர் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினர். முடிவில், அகில இந்திய மாநாட் டிற்கு கோவை மாவட்ட குழு சார்பில் 105 பேர் கொண்ட  வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக  ஏ.ராதிகா, செயலாளராக சி.பத்மநாபன், பொருளாள ராக கே.எஸ்.கனகராஜ் மற்றும் 13 துணைத் தலைவர் கள், 13 துணைச் செயலாளர்கள் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் நன்றி கூறினார்.