விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பைய நாயக்கன்பட்டி பகுதியில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இச்சம்பவத்தில் உரிமையாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டது, உரிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.