விழுப்புரம், ஜன. 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாடு விழுப்புரத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதன் முடிவில், 81 பேர் கொண்ட மாநிலக்குழுவும், மாநிலக் குழுவின் செயலாளராக பெ.சண் முகமும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அவர் உட்பட 15 பேர் கொண்ட மாநில செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. 50 பேர் அகில இந்திய மாநாட்டுக்கான பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இந்திய பட்டாளி வர்க்கத்தின் உரிமைக்குரலாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாடு, ஜனவரி 3 அன்று துவங்கி ஜனவரி 5 வரை விழுப்புரம் ஆனந்தா மஹாலில் நடைபெற்றது. மாநாட்டின் துவக்கமாக செம்படை அணிவகுப்பும், பல்லா யிரக்கணக்கனோர் பங்கேற்ற பேரணியும் - அதன் நிறைவாக மாபெரும் பொதுக்கூட்டமும் நடை பெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப் பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்றனர். 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதி கள் கலந்து கொண்ட மாநாட்டில், மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் அரசியல் - அமைப்பு - வேலையறிக்கையை முன்வைத் தார். இந்த அறிக்கை மீது நடை பெற்ற விவாதத்தில் 96 பிரதிநிதி கள் பங்கேற்றனர். நிறைவாக மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரதிநிதிகள் விவாதத்திற்கு பதிலளித்து பேசி னார்.
புதிய மாநிலக்குழு தேர்வு
அதைத்தொடர்ந்து, 81 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. 15 பேர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். மதுரையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகளாக 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பிரகாஷ் காரத் நிறைவுரை
அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் மாநாட்டை நிறைவு செய்து உணர்ச்சிமிகு உரையாற்றினார். அவரது உரையை மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி தமிழில் மொழியாக்கம் செய்தார். வரவேற்புக்குழு செயலாளர் என். சுப்பிரமணியன் நன்றி கூறி னார். மாநாட்டை வெகுசிறப்பாக நடத்திய வரவேற்புக்குழுவுக்கும், பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவித்து மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உரையாற்றினார். உரிமைக்குரல் முழங்கும் அப்போது, தமிழகத்தின் பட்டாளி வர்க்கத்தின் போர்ப் படையாகவும், ஒடுக்கப்பட்ட பட்டி யலின - பழங்குடியின மக்களின் உரிமைக்குரலாகவும், தொழி லாளர்கள், விவசாயிகள் - விவ சாயத் தொழிலாளர்களின் நம்பிக்கையாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளங்கும். போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்று பெ. சண்முகம் குறிப்பிட்டார். தொடர்ந்து சர்வதேச கீதம் இசைக்கப்பட்டு, விண்ணதிரும் முழக்கங்களுக்கு இடையே மாநாடு நிறைவு பெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெ. சண்முகத்தை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்த முதல்வர், தமது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தோழர்களுக்காகவும் உழைத்த அவருக்கு கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை கழக அரசு வழங்கியது. அத்தகைய சிறப்புக்குரிய தோழர் சண்முகம், சிபிஎம் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், கழகக் கூட்டணியின் அனைத்து வெற்றிகளுக்கும் எந்நாளும் உழைத்த தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றிருந்தாலும் மக்கள் பணிக்கு விடைகொடுக்காமல் நாளும் உழைப்பவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் என்பதை நாடறியும். இரு தோழர்களும் தங்கள் பணி யைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
மாநிலக்குழு உறுப்பினர்கள்
1. உ. வாசுகி
2. பெ. சண்முகம்
3. என். குணசேகரன்
4. க. கனகராஜ்
5. மதுக்கூர் இராமலிங்கம்
6. சு. வெங்கடேசன்
7. கே. பாலபாரதி
8. ஜி. சுகுமாறன்
9. கே. சாமுவேல்ராஜ்
10. எஸ். கண்ணன்
11. என். பாண்டி
12. டி. ரவீந்திரன்
13. செ. முத்துக்கண்ணன்
14. பா. ஜான்சிராணி
15. ஐ. ஆறுமுகநயினார்
16. கே. காமராஜ்
17. வி. மாரிமுத்து
18. பி. சுகந்தி
19. எம். சின்னதுரை
20. ஐ.வி. நாகராஜன்
21. கே.ஜி. பாஸ்கரன்
22. ஆர். லீமாறோஸ்
23. எஸ்.கே. பொன்னுத்தாய்
24 ஆர். பத்ரி
25. ஆர். வேல்முருகன்
26. கே. நாகராஜன்
27. கே. சுவாமிநாதன்
28. எல். சுந்தரராஜன்
29. கே. அர்ச்சுணன்
30. எஸ். வாலண்டினா
31. வெ. ராஜசேகரன்
32. ஆர். விஜயராஜன்
33. ஆர். செல்லசுவாமி
34. எம். ஜெயசீலன்
35. ஆர். சச்சிதானந்தம்
36. வி.பி. நாகை மாலி
37. ஏ. குமார்
38. எம். சிவக்குமார்
39. என். சுப்பிரமணியன்
40. சி. பத்மநாபன்
41. கே. ஆறுமுக நயினார்
42. எஸ்.பி. ராஜேந்திரன்
43 எம். கண்ணன்
44. கோ. மாதவன்
45. பி. டில்லிபாபு
46. எஸ். பாலா
47. எஸ். நம்புராஜன்
48. ஏ. ராதிகா
49. வீ. அமிர்தலிங்கம்
50. வீ. மாரியப்பன்
51. ஆர். ரகுராமன்
52. வி.ஏ. பாஸ்கரன்
53. எஸ். கோபால்
54. ஜி. செல்வா
55. டி.எம். ஜெய்சங்கர்
56. சின்னை. பாண்டியன்
57. மா. கணேசன்
58. கே.பி. ஆறுமுகம்
59. எம். ராமகிருஷ்ணன்
60. சாமி. நடராஜன்
61. எஸ்.ஜி. ரமேஷ்பாபு
62. எஸ்.டி. சங்கரி
63. இ. முத்துக்குமார்
64. கே. திருச்செல்வன்
65. பி. கற்பகம்
66. இரா. சிந்தன்
67. கே. ராஜேந்திரன்
68. இரா. சிசுபாலன்
69. ஏ.வி. சிங்காரவேலன்
70. பி. பூமயில்
71. ஏ. குருசாமி
72. எஸ். சங்கர்
73. கே. பிரபாகரன்
74. பி. சீனிவாசன்
75. டி. முருகையன்
76. ஜி. பிரமிளா
77. கே. வனஜகுமாரி
78. ஜி. ராணி
79. வீ. கீதா
80. கே.பி. பெருமாள்