tamilnadu

img

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சென்னை,ஜனவரி.06- தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர்களின் பட்டியலை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.24 கோடி பெண் வாக்காளர்களும், 3.11 கோடி ஆண் வாக்காளர்களும், 9.120 லட்சம் மாற்றுப்பாலின வாக்காளர்களும் உள்ளனர்.
அதிகபட்சமாக 6.91 லட்சம் வாக்காளர்களை சோழிங்கநல்லூரும், குறைந்தபட்சமாக 1.76 லட்சம் வாக்காளர்களை நாகையும் பெற்றுள்ளன.