ராமநாதபுரம்,ஜனவரி.04- பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய பாஜக நிர்வாகி சண்முகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் நேற்று பாஜக சார்பில் மதுரையில் நடக்கும் போராட்டத்திற்கு அனுமதியின்றி பேரணி நடத்தப்பட்டு, போராட்டமும் நடத்தப்பட்டது.
அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாஜகவினரைக் கைது செய்தபோது பாஜக நிர்வாகி சண்முகம் என்பவர் பெண் உதவி ஆய்வாளரைக் கையாள் தள்ளிய சம்பவம் தாக்கியுள்ளார். இந்நிலையில் சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.