இராமநாதபுரம்:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செப்.22-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என்பதை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராக ராவ் ஞாயிறன்று உறுதிபடுத்தியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 09.30 மணியளவில்; பொதுப் பணித் துறை(நீர்வள ஆதார அமைப்பு), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை பொறியியல் துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை,பள்ளிக்கல்வித் துறை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பாக பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, நகராட்சி மற்றும் குடிநீர்வழங்கல் துறை, நிதித் துறை (கருவூலம்) ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட் டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து துறை முதன்மைஅலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாயம் மற்றும் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.
விருதுநகருக்கு வருகை இல்லை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுநகருக்கு வருவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன்தெரிவித்துள்ளார். முதல்வர் வருகை ரத்து குறித்து அவர் அளித் துள்ள விளக்கத்தில், “தமிழக முதல்வர் வரும் செப்டம்பர் 23 ல்விருதுநகர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்து ஆய்வு பணிகள் மேற் கொள்ள இருந்த நிலையில் அந்தநிகழ்ச்சி தவிர்க்க முடியாத சில நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் விருதுநகர் மாவட்டத்திற்கு வருகைபுரியும் தேதி பின்னர் அறிவிக்கப் படும்” எனக் கூறியுள்ளார்.