tamilnadu

img

புதுக்கோட்டையில் மதுக் கடையை அகற்றக்கோரிய சிபிஎம் கட்சியினரைத் தாக்கி போலீஸ் அராஜகம்!

புதுக்கோட்டையில் மதுக் கடையை அகற்றக்கோரிய சிபிஎம் கட்சியினரைத் தாக்கி போலீஸ் அராஜகம்

தகாத வார்த்தைகளை பேசியதுடன், வலுக்கட்டாய கைதால் தோழர்கள் காயம்

புதுக்கோட்டை, நவ. 18 -  புதுக்கோட்டையில், ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் எப்எல்-2 மது பானைக் கடை திறப்புக்கு எதிராக, செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் அத்துமீறி அராஜகத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகரில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் எப்எல்-2  மதுபானக்கடை கடந்த சில வாரங் களாக இயங்கி வருகிறது. இந்தக் கடை அருகில் பள்ளிக்கூட்டம், பேருந்து நிறுத்தம், கல்லறைத் தோட்டம் உள்ளிட்டவை உள்ளன.  இது முழுக்க, முழுக்க குடியிருப்பு கள் நிறைந்த பகுதி.  இந்தக் கடையால் பள்ளி, கல்லூ ரிகளுக்குச் செல்லும் மாணவ, மாண வியரும், பொதுமக்களும் கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகி வரு கின்றனர். கடை சாலை ஓரத்தில் உள்ளதால் குடித்து விட்டு வாக னத்தில் வெளியே வருபவர்களால் அடிக்கடி விபத்துக்கள் நேரும் அபாயமும் உள்ளது. திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே, இந்தக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. அப்பகுதி பொதுமக்களும் தங்கள் பகுதியில் மதுபானக்கடை அமைக்கக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், மதுபானக்கடை தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், மேற்படி மதுபானக் கடையை அகற்ற  வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் 18 அன்று முற்றுகைப் போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது. அத்துமீறிய போலீசார் அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழ மை புதுக்கோட்டை அசோக் நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேரணி யாக புறப்பட்டு, கடையை முற்றுகை யிடச் சென்றனர். கடை அருகே சென்ற தும் காவல்துறையினர் அனை வரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது, முழக்கங்களை எழுப்பிய கட்சியினரைப் பார்த்து தகாத  வார்த்தைகளை பயன்படுத்தியதுடன், சாலையில் தரதரவென்றும் இழுத்துச் சென்றனர். இதனால் ஆவேசமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, மாவட்டச் செயலா ளர் எஸ். சங்கர் உள்ளிட்ட கட்சியினரை கிரிமினல் குற்றவாளி போல் நடத்திய திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர் அழகுராஜ் தலைமையிலான போலீ சார், அடித்து துன்புறுத்தி, வாக னத்திற்குள் இழுத்துச் சென்றனர். இதில், சிபிஎம் மாநகரச் செயலாளர் எஸ். பாண்டியன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். மகாதீர், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜனார்த்தனர், செயலாளர் ஆர். வசந்தகுமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.  சிபிஎம் கண்டனம் முன்னதாக, முற்றுகைப் போராட்டத்திற்கு கட்சியின் மாநகரச் செயலாளர் எஸ். பாண்டியன் தலைமை வகித்தார். அசோக் நகர்  கிளைச் செயலாளர் எம். சித்ரா, மாநக ரக்குழு உறுப்பினர் பழ. குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற்றினார். அவர் பேசும்போது, “புதுக்கோட்டை காவல்துறையினர் ஒரு பொறுப் பான அரசியல் கட்சியினர் மீது நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத் தக்கது. புதுக்கோட்டை மாநகரத்தில் அனைத்து வார்டுகளிலும் இதுபோன்ற மனமகிழ் மன்றங்களை திறக்க உள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கடையை உடனடியாக மூடுவ தற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’’ என எச்சரித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ். கவிவர்மன், ஜி. நாக ராஜன், சு. மதியழகன், எஸ். ஜனார்த்த னன், கி. ஜெயபாலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி. அன்புமணவாளன், கே. முகமதலி ஜின்னா, டி. காயத்திரி,  மாதர் சங்க தலைவர் எஸ். பாண்டிச் செல்வி, மாவட்டச் செயலாளர் பி. சுசிலா,  வாலிபர் சங்க மாவட்டச்  செயலாளர் ஆர். மகாதீர், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலளார் எம். கணேஷ், மாணவர் சங்க தலைவர் எம். வாசுதேவன், மாவட்டச் செயலாளர் ஆர். வசந்த குமார், சிஐடியு மாநகர ஒருங்கிணைப் பாளர் எம்.ஏ. ரகுமான், மாநகரக்குழு உறுப்பினர்கள் சி. அடைக்கலசாமி, ஆர். சோலையப்பன், ஆர். கார்த்திக், பி. நித்திஷ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். (ந.நி.)