tamilnadu

எஸ்ஐஆருக்கு எதிரான மனுக்கள்:  டிச.4-இல் விசாரணை

எஸ்ஐஆருக்கு எதிரான மனுக்கள்:  டிச.4-இல் விசாரணை

புதுதில்லி, நவ.26 - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற் கொள்வதற்கு எதிராக தாக்கல்  செய்யப் பட்ட மனுக்கள் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் அறிவித் துள்ளது. தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து பல்வேறு மாநிலங் களில் இருந்து உச்சநீதி  மன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வில், டிசம்பர் 9 மற்றும் 11 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எஸ்ஐஆர் பணிகள் இடையூறுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதையடுத்து, கேரள மாநில மனுக்கள் டிச.2 ஆம் தேதியும், தமிழக மனுக்கள் டிச.4 ஆம் தேதியும், மேற்கு  வங்க மனுக்கள் டிச.9  ஆம் தேதியும் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எஸ்ஆர்ஐ பணிகளுக்கு எதிராக திமுக, சிபிஎம், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் மனு தாக்கல் செய்துள்ளன.  இந்நிலையில், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமை யிலான நீதிபதிகள் எஸ்.என்.வி பாட்டீ மற்றும் ஜாய்மால்ய பாக்சி ஆகி யோர் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையம் பதி லளிக்க உத்தரவிட்டுள்ளது.