tamilnadu

img

மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நாடு தழுவிய கிளர்ச்சி தொழிலாளர் - விவசாயிகள் எழுச்சி

மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நாடு தழுவிய கிளர்ச்சி தொழிலாளர் - விவசாயிகள் எழுச்சி

புதுதில்லி/சென்னை, நவ. 26-  அடக்குமுறையைக் கட்ட விழ்க்கும் மத்திய மோடி அரசின் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கருப்புச் சட்டங்களுக்கு எதிராக, நாட்டின் உழைக்கும் வர்க்கமும், மண்ணை நம்பி வாழும் விவசாய சமூகமும் நவம்பர் 26 புதனன்று ஒன்றுதிரண்டு வீறுகொண்டு எழுந்தது! நாடு முழுவதும் 500-க்கும்  மேற்பட்ட மாவட்டங்களில் வெடித்த இந்தப் பெரும் கிளர்ச்சி, மக்கள் சக்தியின் ஆவேசத்தை ஒன்றிய அரசுக்கு அழுத்தமாக காட்டியது.  பத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா வின் (SKM) கூட்டுப் பிரகடனத்தின் கீழ், தலைநகர் தில்லி முதல் தமிழ கத்தின் அனைத்து மாவட்டங்களி லும் ஆர்ப்பாட்டங்கள் அனலாய்ப் பறந்தன. விலைவாசி உயர்வு, வேலை யின்மை, சமூகப் பாதுகாப்பு மறுப்பு  எனப் பலதரப்பட்ட துயரங்களால் குமுறிக் கொண்டிருந்த தொழிலா ளர்களும் விவசாயிகளும் இன்று ஒரே மேடையில் இணைந்து, தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர்.  

சென்னையில்  ஆவேசம்!  

உரிமைகளைக் காலில் போட்டு  மிதிக்கும் சட்டங்களை எதிர்த்து,  சென்னை மண்ணில் உழைக்கும் மக்களின் ஆவேசம் ஆர்ப்பாட்டத் தில் வெளிப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன் எழுச்சியுடன் பேசி னார். “தொழிலாளிகளை 150 வரு டத்திற்குப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் இந்தச் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் வழியில் நீண்ட, நெடிய, அழுத்தம் தரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்து வோம்!” என்று அவர் சூளுரைத்தார். தொழிலாளிகளின் கை, கால், வாயைக் கட்டி முதலாளிகளின் காலடியில் நிராயுதபாணியாகப் போடும் சட்டங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளதாக அவர் ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.  சவுந்தரராசனுடன், இந்த  ஆர்ப்பாட்டத்தில் தொமுச சார்பில் கி.நடராசன், சிஐடியு சார்பில் ஜி.சுகு மாறன் மற்றும் எஸ். கண்ணன், ஏஐ டியுசி சார்பில் எஸ். ராதாகிருஷ்ணன், எம்எல்எப் சார்பில் அந்திரிதாஸ், மகபூப் ஜான் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் எம். சந்திரன் உள்ளிட்ட பல முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர்.  எச்எம் எஸ், ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி உள்ளிட்டுப் பல்வேறு சங்கங்களின் தலைவர்களும் களமிறங்கி போராட்டத்தை வீரியப்படுத்தினர்.  

திரிபுராவில் தாக்குதல்  

திரிபுராவில் அமைதியான மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது கோழைத்தன மாக நடத்தப்பட்ட தாக்குதலைச் சுட்டிக் காட்டி, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. “எங்கள் கோரிக்கைகள் மீது ஒன்றிய அரசு உடனடியாக நட வடிக்கை எடுக்கத் தவறினால், இது ஒரு சிறு முன்னோட்டமே! விரைவில் மிகப் பெரிய, உறுதியான, நாடுதழுவிய கிளர்ச்சியை எதிர்கொள்ள நேரிடும்!” என்று எச்சரித்துள்ளனர்.