states

img

மோசமான உணவு, குடிநீர்  ம.பி. தனியார்  கல்வி நிறுவனத்தில்  மாணவர்கள் போராட்டம்

மோசமான உணவு, குடிநீர்  ம.பி. தனியார்  கல்வி நிறுவனத்தில்  மாணவர்கள் போராட்டம்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில், உணவு மற்றும் குடிநீரின் தரம்  ‘மிக மோசமாக’ இருப்பதைக் கண்டித்து  மாணவர்கள் போராட்டம் நடத்தினர். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 3,000 முதல் 4,000 மாணவர்களால்  தரமான  உணவு, தூய்மையான குடிநீர் வழங்க  வேண்டும் என வலியுறுத்தி  துவங்கிய  போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறை யாக மாறியுள்ளது.  இதில் ஓரு பேருந்து,  இரண்டு நான்கு சக்கர வாகனங்கள், ஒரு  ஆம்புலன்ஸ், விடுதி ஜன்னல் கண்ணாடி கள், குடிநீர்  (RO) சுத்திகரிப்பு ஆலை மற்றும் வளாகத்தின் பிற பகுதிகள் சேத மடைந்தன.  போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு  சென்ற காவல்துறையினர் மாணவர்களு டன்  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்ச னைகளுக்குத் தீர்வு காணத் தேவை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உறுதியளித்ததாகவும் இதனைத்  தொட ர்ந்து, நிலைமை கட்டுக்குள் வந்துள்ள தாகவும் காவல்துறை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து தனியார் கல்வி  நிறு வனம் நவம்பர் 30 வரை விடுமுறை அறி வித்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தீபக் சுக்லா தெரிவித்துள்ளார். இது கல்வி நிறுவனத்தின் தோல்வி மட்டுமல்ல பாஜக அரசாங்கம் மற்றும்  அதன் அரசு நிர்வாக அமைப்பின் தோல்வி. அதிகக் கட்டணம் வசூலித்த நிர்வாகம் சுத்தமான நீர், தரமான உணவு என போதிய அடிப்படை வசதிகளை செய்யவில்லை. மேலும் மோசமான குடி நீர் தரத்தால் மாணவர்கள் பலர் மஞ்சள்  காமாலையால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.