tamilnadu

முல்லைப் பெரியாறு  நீர்மட்டம் உயர்வு

முல்லைப் பெரியாறு  நீர்மட்டம் உயர்வு

தேனி, நவ.26 - கேரள எல்லைப் பகுதி யில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி யில் 14,707 ஏக்கர் பரப்பள வில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.  செவ்வாயன்று மாலை அணையின் நீர்மட்டம் 140  அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து கேரள மாநிலத் துக்கு 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.  அணைக்கு நீர்வரத்து 1927 கன அடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  அணையில் 7153 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.