states

img

ஒவ்வொருவரும் அரசமைப்பு மாண்புகளை பாதுகாக்க வேண்டிய நேரம் இது

ஒவ்வொருவரும் அரசமைப்பு மாண்புகளை பாதுகாக்க வேண்டிய நேரம் இது

திருவனந்தபுரம் ஒவ்வொரு குடிமகனும்  நாட்டின் பன்மைத்துவத்  தையும் ஜனநாயகத்தை யும் பாதுகாக்கத் தயாராக இருக்க வேண்டிய நேரம் இது என்று முத லமைச்சர் பினராயி விஜயன் கூறி னார். அரசமைப்பு தினத்தையொட்டி சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட செய்  தியில் முதலமைச்சர் மேலும் கூறி யிருப்பதாவது: நீண்ட விவாதங்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்குப் பிறகு  சுதந்திரப் போராட்டத்தின் அடிப்  படை நோக்கமாகக் கொண்ட நீதி,  சமத்துவம் மற்றும் சிவில் உரிமை களை உணர அரசமைப்புச் சட்டம்  தயாரிக்கப்பட்டது. இந்தியக் குடி யரசின் கண்ணியம், பன்முகத் தன்மை, ஜனநாயகம், மதச்சார் பின்மை மற்றும் கூட்டாட்சியை நிலைநிறுத்தும் உறுதி அரசமைப்  பில் உள்ளது என்றும் முதலமைச் சர் குறிப்பிட்டார். ஏகாதிபத்தியம் மற்றும் சமூக  அநீதிகளுக்கு எதிராக சுதந்திரப்  போராளிகள் செய்த போராட்டங் கள் மற்றும் தியாகங்களை நினை வூட்டும் ஒரு நாள் அரசமைப்பு தினம். அவர்கள் தங்கள் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்திய நன்மதிப்புகளைப் பற்றி யும், அவற்றை நாம் பாதுகாக்க முடியுமா என்பதையும் சிந்திக்க இது ஒரு தருணமாகும். இன்று நமது அரசமைப்புச் சட்டம் எதிர்  கொள்ளும் சவால்கள் பன்முகத் தன்மை கொண்டவை. மதச்சார்  பின்மை மற்றும் கூட்டாட்சியின் அடித் தளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடியுரிமைக்கு மத அளவுகோல் குடியுரிமைக்கு மதம் அளவு கோலாக்கப்படும் வகையில், வர லாறு திரிபுபடுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் உணர்வுக்குப் பதி லாக மூடநம்பிக்கை ஊக்கு விக்கப்பட்டு, வகுப்புவாதத்தால் மத நல்லிணக்கத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்தக் காலகட்டத்  தில், அரசமைப்பு விழுமியங்க ளைப் பாதுகாப்பது பெருமளவில் பொருத்தமானதாகி வருகிறது. மாநிலங்களின் உரிமைகள் மீறப்  படுவதும் இதற்கான உதாரணங்  களாகும்.  மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும், கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தவும்  உயர் பதவிகளை தவறாகப் பயன் படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இந்த நாள் வெறும்  நினைவூட்டல் அல்ல. மக்க ளுக்காக மக்களால் உருவாக்கப் பட்ட அரசமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடமே உள்ளது.  அரசமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமக னின் பொறுப்பு என்பதை முதல மைச்சர் தனது பதிவில் நினை வூட்டி உள்ளார்.