india

img

தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டத்திற்கு துணை நிற்போம்! - சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி

கார்ப்பரேட் ஆதரவு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டத்திற்கு சிபிஎம் துணை நிற்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவுபெற்ற இன்று, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கூட்டு அழைப்பின் பேரில், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
சமீபத்தில் அறிவித்த ஒருதலைப்பட்சமான தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் மூலம் உழைக்கும் மக்களின் உரிமைகளை பறிக்கும் அதிகாரத்தை கார்ப்பரேட்களுக்கு அளித்து, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு காட்டாட்சியை நிறுவ முயல்கிறது. கார்ப்பரேட் ஆதரவு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுடன் துணை நிற்போம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.