tamilnadu

img

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந்த சூழலில், செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.